மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் பாஜகவின் வெற்றி பயணம் – பமீலா கோஸ்வாமி

தமிழகத்தை போல மேற்கு வங்கத்திலும் பாஜக வெற்றி பெற வேண்டும் . ஏனென்றால் 30 முதல் 33 சதவிதம் இஸ்லாமிய வாக்குகள் கொண்ட மாநிலம் அது. மிக மிக சவாலான களம். பக்கத்தில் உள்ள பங்களாதேஷில் இருந்து ஊடுறுவும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால், அம்மாநிலம் மேலும் மேலும் தேசத்திற்கு சவாலாகி வருகின்றது.

இம்முறை மேற்கு வங்காளத்தின் மிக முக்கிய பாஜக முகமாக ‘பமீலா கோஸ்வாமி’ திகழ்கிறார். 2019- கட்சியில் இணைந்த இவர், ஒரு முன்னாள் விமான பணிப்பெண், மாடல் மற்றும் நடிகையாவார். அப்போது வெறும் 26 வயதே ஆன இவரின் திறமையை அங்கீகரித்து பாஜக இளைஞரணியின் தலைவராக இவரை கட்சி நியமித்தது. இப்போதும் இவருக்கு 32 வயதே ஆகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பமிலா கோஸ்வாமிக்கு செல்லுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம் திரள்கிறது. புதிய வாக்காளர்கள் பலரும் இவர் பேச்சை கேட்க பெருமளவு திரள்கிறார்கள். ஆனால் 14 வருடங்களாக கோலோச்சி இருக்கும் மமதா பானர்ஜியை அகற்றுவது சாதாரண விஷயமல்ல. ஜமாத்துகள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இஸ்லாமிய வாக்குகள் அவர்களின் பெரும் பலம்.

பாஜக களத்தில் கடுமையாக உழைக்கிறது. வீடு வீடாக சென்று பேசுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் 38 சதவீதம் பெற்றிருக்கும் பாஜக, மமதாவின் 48 சதவீத வாக்குகளை விட பத்து சதவீதம் பின் தங்கி உள்ளது. இன்னும் ஒரு ஐந்து சதவீதம் வாக்குகளை உயர்த்தி விட்டால் போதும். காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் ஒன்றிணைந்து போட்டியிட, மமதாவின் வாக்குகள் பிரிய வாய்ப்புள்ளது.

மேலும் சிறப்பு தீவிர திருத்தம் எனும் S.I.R. அமலுக்கு வந்துள்ளதால், கள்ள ஓட்டுகள், போலி ஓட்டுகள் பெரிதும் குறையும். அது பாஜகவுக்கு சாதகமாகும். மமதாவை மட்டும் வீழ்த்தி விட்டால், அது ஒரு சரித்திர வெற்றியாக இருக்கும். கிழக்குப் பகுதிகள் முழுமையாக தேசியவாதத்தின் பக்கம் திரும்பும் தருணமாக இருக்கும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...