பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலி மூலம் மன் கி பாத் எனப்படும் மனதின்குரல் நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 130-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பானது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, மலேசியாவில் இந்தியமொழிகள் மற்றும் கலாசாரம் பாதுகாக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் இந்திய சமூகத்தினரை பாராட்டினார்.
பிரதமர் மோடி பேசும்போது, மலேசியாவில் உள்ள நம்முடைய இந்தியசமூகத்தினர் மெச்சத் தக்க பணிகளை மேற்கொள்கின்றனர். மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில், தமிழ் மொழியுடன், பிறபாடங்களும் தமிழில் கற்பிக்கப்படுகின்றன.
அதனுடன், மற்ற இந்திய மொழிகளான தெலுங்கு மற்றும் பஞ்சாபி ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படுகிறது என பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இதேபோன்று மலேசியாவில் துடிப்பான ஒடிசிநடனம் ஆடப்பட்டது. மற்றும் பாவல் இசை இசைக்கப்பட்டது. இவை இந்தியா மற்றும் மலேசியா இடையேயான வலுவானகலாசார பிணைப்பை பிரதிபலிக்கிறது என அவற்றையும் பிரதமர் மோடி பாராட்டினார்.
கடந்த மாதம், லால் பாத்சேலை அணிந்து மலேசிய இந்திய பாரம்பரிய சமூகம் தனித்துவ நிகழ்ச்சியை நடத்தியது. இதனை குறிப்பிட்ட பிரதமர் மோடி, வங்காள கலாசாரத்துடன் அந்த சேலை ஒருசிறப்பு பிணைப்பை கொண்டது என்று கூறினார்.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |