2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கிறது – மத்திய அமைச்சர் அமித் ஷா

அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டமிடலை குறிப்பதுடன் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கும் பட்ஜெட்டிற்காக ஒவ்வொரு இந்தியரின் சார்பாக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கும், மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, உற்பத்தி முதல் உட்கட்டமைப்பு வரையும், சுகாதாரம் முதல் சுற்றுலா வரையும், ஊரகப் பகுதி முதல் செயற்கை நுண்ணறிவு வரையும், விளையாட்டுகள் முதல் யாத்திரைத் தலங்கள் வரையும் ஒவ்வொரு கிராமம், ஒவ்வொரு சிறிய நகரம், ஒவ்வொரு பெரு நகரம் ஆகியவற்றின் இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கக் கூடிய, கனவுகளை நிறைவேற்றக்கூடிய வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான பட்ஜெட் என்று கூறியுள்ளார்.

நிதி விவேகத்துடன் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுடன் கூடிய மோடி அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த சிறப்புமிக்க வளர்ச்சியடைந்த இந்தியா பட்ஜெட்டிற்காக தாம் பிரதமர் திரு மோடிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் நிதி பற்றாக்குறையை 4.5 சதவிகிதம் அளவிற்கு குறைவாக நிர்வகிப்பது என்ற இலக்கை நிறைவு செய்வதாக தெரிவித்துள்ளார்.

2026 – 27-ம் ஆண்டு பட்ஜெட் மூலம் தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்பது வெறும் சொற்றொடராக மட்டுமின்றி மட்டுமல்ல நமது அரசின் உறுதியான தீர்மானமாகவும் உள்ளதுss என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் ஒவ்வொரு துறை, ஒவ்வொரு சமூகம், ஒவ்வொரு மக்களுக்கும் அதிகாரமளிப்பதற்கான தெளிவான வரைவு செயல்திட்டத்தை வழங்குவதோடு மட்டுமின்றி ஒவ்வொரு படியிலும் அவர்களை ஊக்குவிக்கவும், ஆதரிக்கவும் நடைமுறைக்கு உகந்த, கள அளவிலான தொலைநோக்குப் பார்வையையும் இது அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

நித்தியகல்யாணியின் மருத்துவ குணம்

நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ...