நமது நாடும் நமது வீடும் பயன் பெறும் வகையில் அமைந்துள்ள மத்திய பட்ஜெட்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

அனைவருடனும் அனைவரின் நலனுக்காகவும் என்ற உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும், தமிழ்நாட்டு மக்கள் பயன் பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களுடனும் வரலாற்று சிறப்புமிக்க வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை வழங்கியுள்ள நமது பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கும், மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரும் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் மூலதனச் செலவு 10% உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம் நாடு முழுவதும் உள்ள கட்டமைப்புகள் மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனை வளப்படுத்தி, அவர்களுக்கு தரமான சுகாதாரம் மற்றும் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்தும் வகையிலும் மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர் இயக்கம் 2.0 திட்டத்திற்காக ரூ.40,000 கோடியை ஒதுக்கீடு செய்து இருப்பதன் மூலம் வேலைவாய்ப்பும், அந்நிய முதலீடுகளும் பெரிய அளவில் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகமும் பயன்பெற போகிறது.

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

சென்னையிலிருந்து பெங்களூருவுக்கும், ஹைதராபத்திலிருந்து சென்னைக்கும் அதிவேக ரயில் பாதைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மீனவர்கள் பயன்பெறும் வகையில் 500 நீர்தேக்கங்கள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கைத்தறித்துறையை மேம்படுத்தும் மகாத்மா காந்தி கைத்தறித் திட்டம் தமிழ்நாட்டுக்கு பெருமளவு பயனளிக்கும்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் உள்ள அரிய கனிமவளங்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அரிய கனிம வழித்தடங்கள் அமைக்கப்படுகிறது.
தென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் தமிழகம் பெருமளவு பயன்பெறும்.
இதுதவிர மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள கீழ் கண்ட திட்டங்கள் தமிழகத்துக்கு கூடுதல் பயன் சேர்க்கும்.
ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்.
பொதிகை மலையில் மலையேற்றச் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஒருங்கிணைந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பின் மூலம் தமிழகம் பயன்பெறும்.
பழவேற்காடு ஏரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் 3 இடங்களில் பறவைகளை பார்வையிடும் மையங்கள் அமைக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மகளிர் விடுதி அமைக்கப்படும்
முந்திரி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற லட்சியத்தை எட்டுவதற்கான உறுதியான பாதையை வகுக்கும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. மொத்தத்தில் நமது நாடும், நமது தமிழ்நாடும் மிகுந்த பயனடையும் வகையில் சிறப்பான முறையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...