ஒடிசா மாநிலம் பாலசூரில் ஃபக்கீர் மோகன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று பங்கேற்ற குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு அங்கு கட்டப்பட்டுள்ள புதிய அரங்கையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், யாசகாபீ ஃபக்கீர் மோகன் சேனாபதிக்கு மரியாதை செலுத்துவதாகக் கூறினார். தாம் மாணவியாக இருந்த காலத்தில் அவரது ரேவதி என்ற காலத்தால் அழியாத கதையால் மிகவும் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார். அந்த ஈர்ப்பு என்றும் அழியாதது என்று அவர் கூறினார். 19-ம் நூற்றாண்டில் ஒரு சிறுமியாக கல்வி கற்க வேண்டும் என்ற அவரது தீர்க்கமான முடிவு மனஉறுதிக்கு ஒரு நீடித்த சான்று என்று அவர் குறிப்பிட்டார். ஊரக பழங்குடியின கிராமத்தில் பயின்ற அவர், தமது உறுதியான நிலைப்பாட்டுடன் புவனேஸ்வர் சென்று தமது உயர் பள்ளிக்கல்வியையும் கல்லூரிப் படிப்பையும் நிறைவு செய்தார் என்று அவர் கூறினார். அந்த வகையில் ஃபக்கீர் மோகன் தமக்கு உத்வேகம் அளித்தவர் என்று அவர் தெரிவித்தார்.
தமது தாய்மொழியை மிகவும் நேசிப்பவராக ஃபக்கீர் மோகன் திகழ்ந்தார் என்று குடியரசுத்தலைவர் கூறினார். எனது தாய்மொழி எனக்கு மிகவும் உயர்வானது என்று அவர் எழுதியதாகக் குறிப்பிட்டார். ஒருவர் தமது தாய் மொழியில் கல்வி கற்கும் போது தங்களுடைய சுற்றுப்புறங்கள் கலாச்சாரச் சூழல் ஆகியவற்றில் கல்வியுடன் முறையாக புரிந்து கொள்ள இயலும் என்று அவர் தெரிவித்தார்.
தாய்மொழியின் அவசியத்தை தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது என்றும் தங்களது கலாச்சாரத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு மாணவர்களை வழிகாட்டுவதாகவும் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு குறிப்பிட்டார்.
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |