இந்தியாவின் ஆழ்கடல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஆழ்கடல் சுரங்கத் தொழில்நுட்ப மேம்பாடு கடலுக்கு அடியில் ரோபாட்டிக்ஸ் மற்றும் மனிதனின் ஆய்வுகள், ஆழ்கடல் பருவநிலை மாற்றம் குறித்த ஆலோசனை சேவைகள், ஆழ்கடல் பகுதியில் உள்ள பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு மற்றும் அவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பெருங்கடல் பகுதியிலிருந்து எரிசக்தி மற்றும் நன்னீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஆழ்கடல் உயிரிகளுக்கான நவீன கடல்சார் நிலையங்களை உருவாக்குவது ஆகிய 6 அம்சங்களில் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கடலுக்கடியில் 6,000 மீட்டர் ஆழத்திற்கு ஆய்வு செய்யும் வகையில் மனிதனை அனுப்பும் இந்தியாவின் முன்னோடித் திட்டத்திற்கான வடிவமைப்பு மற்றும் பொறியியல் சார்ந்த அமைப்பு முறைகளை சிறப்பான நடைமுறையை நிறைவு செய்துள்ளதாக அவர் கூறினார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய புவிஅறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |