நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது 2027-க்குள் அணுமின் சக்தி உற்பத்தித் திறனில் 100 ஜிகாவாட் என்ற நிலையை எட்டும் நோக்கில் மத்திய அரசு அணுசக்தி இயக்கத்தை அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலக இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், “சாந்தி” (நீடித்த பயன்பாடு மற்றும் மேம்பாட்டுடன் கூடிய அணுசக்தி மாற்றத்திற்கான) சட்டத்தையும் மத்திய அரசு இயற்றியுள்ளது.
வரும் 2033-ம் ஆண்டுக்குள் 5 உள்நாட்டு சிறிய அளவிலான அணுஉலைகளின் வடிவமைப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் மொத்தம் 13,600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 17 அணுஉலைகள் அமைக்கும் பணிகள் பல்வேறு கட்டங்களில் உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் 2031-32-ம் ஆண்டுக்குள் படிப்படியாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |