உடல் வலிமை, தலைமைத்துவம், குழுப்பணி மற்றும் மனஉறுதி ஆகிய பண்புகள் மலையேறுபவர்களுக்கு மிகவும் அவசியமானது என்று பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுதில்லியிலிருந்து அர்ஜென்டினாவில் உள்ள மவுண்ட் அகோன்காகுவாவிற்கான பயணத்தை அவர் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 6,961 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலை தென்அமெரிக்காவின் மிக உயரமான சிகரமாகவும் ஆசியாவிற்கு வெளியே உள்ள மலைகளில் மிக உயரம் கொண்டதாகவும் உள்ளது.
உத்தரகாசியில் உள்ள நேரு மலையேற்ற நிறுவனம் மற்றும் பஹல்காமில் உள்ள ஜவஹர் மலையேற்ற மற்றும் குளிர்கால விளையாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த கூட்டுப் பயணத்தை மேற்கொள்கின்றன.
துணிச்சல், மனஉறுதி, விடாமுயற்சியுடன் சவால்களை எதிர்கொள்வதற்கு வீரர்களுக்கு பயிற்சி அளித்து வரும் இத்தகைய நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார். மிகவும் சவாலான இந்த மலையேற்றப் பயணத்தை மேற்கொள்ளும் குழுவினருக்கு அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த மலையேற்றப் பயணம் உடல் வலிமைக்கான சோதனையாக இருப்பது மட்டுமின்றி, தலைமைப் பண்பு, குழுவாகப் பணியாற்றுவது மன உறுதி போன்ற உயர் பண்புகளுக்கான தேர்வாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து சிகரத்தை எட்டி நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் என்று திரு ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார்.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |