பிரதமர் மோடி மதுரை வருவதற்கு முன்பாக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும்: நயினார் நாகேந்திரன்

பிரதமர் மோடி மதுரைக்கு வரு​வதற்கு முன்​பாக, திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார்.

மதுரை​யில் வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி பங்​கேற்​கும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி தேர்​தல் பிரச்​சா​ரப் பொதுக்​கூட்​டம் நடை​பெறுகிறது. கடந்த 7 ஆண்​டு​களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்​து​வ​மனை அடிக்​கல் நாட்டு விழா நடை​பெற்ற மண்​டேலா நகர் பகு​தி​யில் இக்​கூட்​டத்தை நடத்த முடிவு
செய்​யப்​பட்​டுள்​ளது.

அங்கு பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், அதி​முக மாவட்​டச் செய​லா​ளர்​கள் செல்​லூர் கே.​ராஜு, ஆர்​.பி.உதயகு​மார், வி.​வி.​ராஜன் செல்​லப்​பா, பாஜக மாநில நிர்​வாகி​கள் ராம.சீனி​வாசன், கருப்பு முரு​கானந்​தம், ஏ.பி.​முரு​கானந்​தம், பொன்​.​பால​கணப​தி, சசிகலா புஷ்பா உள்​ளிட்​டோர் நேற்று பார்​வை​யிட்​டனர்.

பின்​னர் நயி​னார் நாகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த தேர்​தலில் ஒரு செங்​கல்லை காட்டி எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​ட​வில்லை
என உதயநிதி பிரச்​சா​ரம் செய்​தார். தற்​போது எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கம்​பீர​மாக வளர்ந்து நிற்​கிறது.

அதை நினை​வுபடுத்​தும் வகை​யில் இந்த இடம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டு​மானப் பணி​கள் முடிந்த பிறகு, திறப்பு விழா குறித்து முடிவு செய்​யப்​படும்.

பிரதமர் மோடி மதுரை வரு​வதற்கு முன்​பாக திருப்​பரங்​குன்​றத்​தில் தீபத் தூணில் தீபம் ஏற்​றி, நீதி​மன்​றத் தீர்ப்பை அரசு நிறைவேற்ற வேண்​டும். அடுத்து ஆட்​சிக்கு வர முடி​யாது என்ற நிலை​யில், அரசு ஊழியர்​களுக்​கான ஓய்​வூ​தி​யத் திட்​டம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...