பயங்கரவாதத்தில் : இரட்டை நிலைப்பாடு இல்லை, சமரசமும் இல்லை

புது டெல்லி மற்றும் கோலாலம்பூர் இடையிலான உத்தி நம்பிக்கை பொருளாதார மாற்றத்திற்கான வழி என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது மற்றும் சமரசமற்றது என்றும், அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

“பயங்கரவாதத்தில் எங்களதுசெய்தி தெளிவானது: இரட்டை நிலைப்பாடு இல்லை, சமரசமும் இல்லை” என்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையின் போது மோடி கூறினார்.

“பாதுகாப்புத் துறையில் பயங்கரவாத எதிர்ப்பு, உளவுத்தகவல் பகிர்வு மற்றும் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம்” என்று கூறிய மோடி, “பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை விரிவுபடுத்துவோம்” என்றும் கூறினார்.

“செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்களுடன், செமிகண்டக்டர்கள், சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பிலும் எங்களது ஒத்துழைப்பை மேம்படுத்துவோம்” என்று இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கான எதிர்கால வழியைப் பிரதமர் விளக்கினார். “இன்று நடைபெற்ற தலைமை நிர்வாக அதிகாரிகளின் (CEO Forum) மாநாடு, வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது. உத்திசார் நம்பிக் கையின் மூலம் பொருளாதார மாற்றத்திற்கான வழியை உருவாக்குவோம்” என்று அவர் மேலும் கூறினார்.

பாதுகாப்பு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, இந்தியத் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு, ஆடியோ-விஷுவல் ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் கையெழுத் திடப்பட்ட பல ஒப்பந்தங்களைத் தவிர, உயர்மட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வெளிவந்துள்ள இந்தக் கூட்டு அறிக்கை பயங்கரவாதம் குறித்துத் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட அனைத்துவடிவிலான பயங்கரவாதத்தையும் இரு பிரதமர்களும் சந்தேகத்திற்கு இடமின்றி வன்மையாகக் கண்டித்தனர் என்று கூட்டு அறிக்கை தெரிவித்தது. பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாத ‘ஜீரோ டாலரன்ஸ்’ கொள்கையையும், பயங்கரவாதத்தை விரிவான மற்றும் நீடித்தமுறையில் எதிர்த்துப் போராடுவதற்கான ஒருங்கிணைந்த சர்வதேச முயற்சிகளையும் அவர்கள் வலியுறுத்தினர்.

அதிகப்படியான இந்திய வம்சா வளியினரைக் கொண்ட மலேசியா, சமீப காலங்களில் காஷ்மீர் போன்ற விவகாரங்களில் பாகிஸ்தானுடன் இணைந்து நின்றது; ஆனால் இப்போது இந்தியாவுடனான இருதரப்புஉறவிற்கு முன்னுரிமை அளிப்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்த கூட்டறிக்கை அமைந்துள்ளது.

கூட்டு அறிக்கையின்படி, இரு தலைவர்களும் “தீவிரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளவும்; பயங்கரவாதநிதி திரட்டலைத் தடுக்கவும்; தகவல் மற்றும் அறிவுப் பகிர்வு, சிறந்த நடைமுறைகள் மற்றும் திறன் மேம்பாடு மூலம் புதியதொழில்நுட்பங்களைப் பயங்கரவாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் ஒப்புக்கொண்டனர்”.

பயங்கரவாதத்திற்கும் நாடுகடந்த திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கும் இடையிலான தொடர்புகளை அங்கீகரித்தஅவர்கள், தகவல் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் அந்தத் துறையில் ஒத்துழைக்க ஒப்புகொண்டனர். ஐ.நா மற்றும் எஃப்.ஏ.டி.எஃப் (FATF) உள்ளிட்ட அமைப்புகளில் பயங்கர வாதத்தை எதிர்ப்பதில் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்களது உறுதிப்பாட்டை இருதலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இப்ராஹிமுடனான விவாதத்தின்போது கையாளப்பட வேண்டிய பல்வேறு விவகாரங்களில், தப்பியோடிய மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்துவதும் இடம்பெறும் என்று இந்தியா சுட்டிக்காட்டிய சிலநாட்களில் மலேசியாவில் மோடியின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

அவருக்கும் அன்வர் இப்ராஹிமுக்கும் இடையே நடைபெற்ற விரிவான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மோடி பேசுகையில், இந்தோ-பசிபிக்பிராந்தியம் குறித்து இந்தியாவின் அணுகுமுறையை விளக்கினார். “இந்தோ-பசிபிக் பிராந்தியம் உலகின் வளர்ச்சி இயந்திரமாக உருவெடுத்து வருகிறது” என்றார். அன்வர் இப்ராஹிம் தனதுதரப்பில், வர்த்தகம், முதலீடு, இணைப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் மலேசியாவும் தொடர்ந்து ஒத்துழைப்பை விரிவு படுத்துவதைக் குறிப்பிட்டதோடு, உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார முன்னணியில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க எழுச்சியையும் சுட்டிக் காட்டினார்.

வர்த்தகம் மற்றும் முதலீடுகள், உணவுப் பாதுகாப்பு, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பலதுறைகளில் ஆழமான ஒத்துழைப்பு இருப்பதாக அன்வர் கூறினார். “இது உண்மையிலேயே விரிவானது, இருஅரசாங்கங்களின் அர்ப்பணிப்புடன் இதை விரைவாக முன்னெடுத்துச் செயல்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அன்வர் கூறினார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து, செமிகண்டக்டர்கள், பேரிடர்மேலாண்மை மற்றும் அமைதி காத்தல் உள்ளிட்ட 11 ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதை அன்வர் மற்றும் மோடி நேரில் பார்வையிட்டனர். இந்தியாவும் மலேசியாவும் உள்ளூர்கரன்சி மூலம் வர்த்தகப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளைத் தொடரும் என்றும், கடந்த ஆண்டு இருந்த 18.6 பில்லியன் டாலர் வர்த்தக அளவைத் இருதரப்பு வர்த்தகம் தாண்டும் என்றும் அன்வர் நம்பிக்கை தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங௠...

அமைதி போராட்டத்திற்கும்,சட்டங்களை மீறுபவர்களுக்கும் வித்தியாசம் உண்டு அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தà® ...

இந்​தி​யா​வுக்கு எதிரான சக்​தி​களை தோற்​கடிக்க வேண்​டும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளை தோற்கடிக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜà® ...

கருத்து வேறுபாட்டிற்கும் அராஜகத்திற்கும் இடையிலான வேறுபாடு ஒரு ஜனநாயகத்தில் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம், ஆனால் அந்தக் ...

விரத நாட்களின் பலன்கள்

விரத நாட்களின் பலன்கள் ஒரு நாள், மூன்று நாட்கள், ஐந்து நாட்கள், ஏழு ...

கலசத்திற்கு எந்த உலோகத்தைப் பயà ...

கலசத்திற்கு எந்த உலோகத்தைப் பயன்படுத்த வேண்டும்?   கலச ஸ்தாபன விதிகள்: நவராத்திரியில் கவனிக்க வேண்டிய 6 ...

கலச ஸ்தாபனம் எப்போது செய்ய வேண் ...

கலச ஸ்தாபனம் எப்போது செய்ய வேண்டும்? பிரபல ஜோதிடர் ஸ்ரீ விமல் ஜெயின் கூறுகையில்: அதிகாலை ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...