இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், இந்தியப் பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகத்தை வழங்கும்- மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்

அண்மையில் இறுதி செய்யப்பட்ட இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், இதுவரை இல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என்று மத்திய வேளாண்மை விவசாயிகள் மற்றும் ஊரக மேம்பாட்டு துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். போபாலில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், இந்த ஒப்பந்தம், இந்தியப் பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகத்தையும் உயர்வையும் வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார். வர்த்தக ஒப்பந்தம் வெறும் வணிகம் சார்ந்த உடன்படிக்கை மட்டுமல்ல, மாறாக சர்வதேச அரங்கில் இந்தியாவின் உயர்ந்தவரும் கௌரவத்தையும் பறைசாற்றுகிறது என்று அவர் கூறினார். இந்த ஒப்பந்தம், இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், அதற்குப் புதிய பாதையையும் அமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இந்தியாவின் கொள்கைகள் சமரசமற்றவை என்பதை இந்த ஒப்பந்தம் உலகிற்கு உணர்த்துகிறது. நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு, முழுமையான நம்பிக்கையுடன் நாம் முடிவுகளை எடுக்கிறோம்”, என்று அமைச்சர் மேலும் கூறினார். சமநிலையான மற்றும் நேர்மறையான உத்தியுடன் உலகளாவிய அரங்கில் இந்தியா முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தம் ராஜதந்திரம், வளர்ச்சி மற்றும் கண்ணியத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று திரு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். ராஜதந்திரம் என்பது, இந்தியாவின் தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் குறிப்பதாகும். வளர்ச்சி என்பது, வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய நடவடிக்கைகளைக் குறிக்கிறது. இதற்கு, இந்திய அமெரிக்க-வர்த்தக ஒப்பந்தம் வலிமையான அடித்தளத்தை அமைக்கிறது. கண்ணியம் என்பது, விவசாயிகளின் கௌரவத்தைக் குறிப்பதாகும். இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், நாட்டின் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கிறது என்று கூறிய அமைச்சர், அதனுடன், புதிய வாய்ப்புகளையும் உருவாக்குகிறது என்று குறிப்பிட்டார். சர்வதேச சந்தையில் நமது வேளாண் தயாரிப்புகளுக்கு இந்த ஒப்பந்த மூலம் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். தன்னிறைவான மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு இது ஒரு வலிமையான அடித்தளமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...