நேதாஜியின் ஐஎன்ஏ வீரர் ஜெயராஜை சந்தித்த பிரதமர் மோடி

நேதாஜி சுபாஷ் சந்​திர போஸின் இந்​திய தேசிய ராணுவத்​தில் (ஐஎன்ஏ) மலேசி​யா, சிங்​கப்​பூரை சேர்ந்த இந்​திய வம்​சாவளி​யினர் இணைந்து பிரிட்​டிஷ் படைக்கு எதி​ராக வீர, தீரத்​துடன் போரிட்​டனர். அவர்​களில் பலர் உயிரோடு உள்​ளனர்.

தற்​போது மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் மலேசிய நேதாஜி நல அறக்​கட்​டளை செயல்​படு​கிறது. இந்த அறக்​கட்​டளை​யில் ஐஎன்ஏ படை​ வீரர்​கள், உயி​ரிழந்த வீரர்​களின் வாரிசுகள் உறுப்பினர்​களாக உள்​ளனர். கோலாலம்​பூரில் நேற்று மலேசிய நேதாஜி நல அறக்​கட்​டளை நிர்​வாகி​களை பிரதமர் நரேந்​திர மோடி சந்தித்துப் பேசி​னார். குறிப்​பாக ஐஎன்ஏ வீரர் ஜெய​ராஜ் ராஜா ராவுடன் அவர் தனிப்​பட்ட முறை​யில் கலந்​துரை​யாடி​னார். இதுதொடர்​பான புகைப்​படங்​களை பிரதமர் மோடி தனது சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டுள்​ளார்.

அதோடு அவர் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ”ஐஎன்ஏ வீரர் ஜெய​ராஜ் ராஜா ராவை சந்​தித்​ததை முக்​கிய நிகழ்​வாக கருதுகிறேன். அவர், வீரம், தியாகத்​தின் அடை​யாள​மாக விளங்குகிறார். அவரது வாழ்க்கை அனுபவங்​கள் அனை​வருக்​கும் ஊக்​கம் அளிக்​கும் வகை​யில் உள்​ளது. சுதந்​திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்​திர போஸ், அவரது ஐஎன்ஏ படை​யில் இருந்த வீரமிக்க பெண்​கள், ஆண்​களுக்கு மரி​யாதை செலுத்த நாம் கடமைப்​பட்டு உள்​ளோம். அவர்​களின் வீரமே, இந்​தி​யா​வின் தலை​யெழுத்தை மாற்​றியது. இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

ஐஎன்ஏ வீரர் ஜெய​ராஜ் ராஜா ராவ் கூறிய​தாவது: பிரதமர் நரேந்திர மோடியை சந்​தித்​தது மிக​வும் அற்​புத​மான தருணம். அவர் மிக​வும் இளமை​யாக இருக்​கிறார். நேதாஜி உடனான எனது பயணம் குறித்து அவர் மிக​வும் ஆர்​வ​மாக கேட்​டறிந்​தார். இந்தியா​வின் வளர்ச்சி குறித்து நாங்​கள் பேசினோம். வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க பிரதமர் நரேந்​திர மோடி மிகுந்த உறு​தி​யுடன் இருக்​கிறார்.

குறிப்​பாக இந்​திய கிராமங்​களை முன்​னேற்ற வேண்​டும். அனைத்து வீடு​களுக்​கும் கழிப்​பறை​களை கட்​டிக் கொடுக்க வேண்​டும். அனைத்து இந்​தி​யர்​களின் சுகா​தார தேவை​களைப் பூர்த்தி செய்ய வேண்​டும் என்று அவர் இலக்கு நிர்​ண​யித்து உள்ளார். இவ்​வாறு ஜெய​ராஜ் ராஜா ராவ் தெரி​வித்​தார்.

இந்​திய வம்​சாவளியை சேர்ந்த மலேசிய அமைச்​சர்​கள் கோவிந்த் சிங் தியோ, ரமணன் ராமகிருஷ்ணன், குலசேகரன், யுனேசுவரன் உள்​ளிட்​டோரை​யும் பிரதமர் நரேந்​திர மோடி கோலாலம்​பூரில்​ நேற்​று சந்​தித்​துப்​ பேசி​னார்​.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...