ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ்

தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல முக்​கிய ரயில்வே திட்​டங்​கள் பின்​னடைவை சந்​திக்​கிறதே தவிர, நிதி பற்​றாக்குறை​யால் திட்​டங்​கள் தடைபடவில்லை என்று முதல்​வர் ஸ்டாலின் குற்​றச்​சாட்டுக்கு ரயில்வே துறை அமைச்​சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்​தார்.

தமிழக ரயில்வே திட்​டங்​களுக்​குத் தேவை​யான நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்​டும் என்று வலி​யுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்​வர் ஸ்டா​லின் நேற்று முன்​தினம் கடிதம் எழு​தி​யிருந்​தார். அதில், ‘94 சதவீத நிலங்​களைக் கையகப்​படுத்​தும் பணி             முடிக்​கப்​பட்​டு, ரயில்வே துறை​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. 931 ஹெக்​டேர் நிலம் எடுக்க ரயில்வே துறை நிதி ஒதுக்​க​வில்​லை’ என்று கூறியிருந்​தார்.

இந்​நிலை​யில், இதற்கு பதில் அளித்து எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் நேற்று                  வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: தமிழகத்​தின் வளர்ச்​சிக்​காக மத்​திய அரசு முழு அர்ப்​பணிப்​புடன் செயல்​படு​கிறது. 2026–27-ம் நிதி ஆண்​டில் தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.7,611 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், மாநில அரசின் ஒத்​துழைப்​பின்றிரயில்வே  உள்​கட்​டமைப்பு மேம்​பாட்டை செயல்​படுத்த முடி​யாது.

செயல்​பாட்​டில் உள்ள ரயில்வே திட்​டங்​களுக்கு தேவை​யான நிலத்​தில் 24 சதவீதம் மட்​டுமே இது​வரை ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளன. அதாவது 4,326 ஹெக்​டேரில் 1,052 ஹெக்​டேர் நிலம் மட்​டும் கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. நிலம் கையகப்​படுத்த, தமிழக அரசுக்கு ஏற்​கெனவே ரூ.1,465 கோடி செலுத்​தப்​பட்​டுள்​ளது.

நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால்​தான் பல முக்​கிய ரயில்வே திட்​டங்​கள் பின்​னடைவை சந்​திக்​கிறதே தவிர, நிதி பற்​றாக்​குறை​யால் திட்​டங்​கள் தடைபட​வில்​லை. இதற்கு மாறாக கூறப்​படும் எந்த குற்​றச்​சாட்​டும் ஆதா​ரமற்​றது.

மதுரை – தூத்​துக்​குடி (வழி: அருப்​புக்​கோட்​டை) புதிய பாதை திட்​டத்​துக்கு 91 சதவீத நில​மும், திண்​டிவனம் – செஞ்சி –                        திரு​வண்​ணா​மலை புதிய பாதை திட்​டத்​துக்கு 86 சதவீதம் நில​மும் கையகப்​படுத்​தாமல் இன்​னும் நிலு​வை​யில் உள்​ளது.

ராமேசுவரம் – தனுஷ்கோடி புதிய பாதை திட்​டத்​துக்கு பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு அடிக்​கல் நாட்​டி​னார். மாநில அரசின் ஒத்​துழைப்பு இல்​லாத​தால், 6 ஆண்​டு​கள் ஆகி​யும், இத்​திட்​டத்​துக்கு நிலம் கையகப்​படுத்​துதல் இன்​னும் தொடங்​கப்​பட​வில்​லை. ஆனாலும்​கூட, தமிழகத்​தில் பல புதிய ரயில் பாதைகள், இரட்​டைப் பாதைகள், 3, 4-வது பாதை திட்​டங்​கள் மத்​திய அரசால்          அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளன. மாநிலத்​தின் பொருளா​தார, தொழில்துறை வளர்ச்​சியை ஆதரிக்க கூடு​தல் திறன் விரி​வாக்​கத்​துக்​காக

விரி​வான திட்ட அறிக்​கைகளும் தயாரிக்​கப்​பட்​டுள்​ளன. கடந்த 2014 முதல், தமிழகத்​தில் சுமார் 1,350 கி.மீ. புதிய ரயில் பாதைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. 2,386 கி.மீ. ரயில் பாதைகள் மின்​ம​யம் ஆக்​கப்​பட்​டுள்​ளன. இது 97 சதவீதம் ஆகும்.

தமிழகத்​தில் ரயில்வே உள்​கட்​டமைப்பு மேம்​பாட்டை வேகப்​படுத்த மத்​திய அரசு தயா​ராக, உறு​தி​யாக உள்​ளது. ஆனால்,               இத்​திட்​டங்​களை மக்​களிடம் விரை​வாக சேர்க்க மாநில அரசு உரிய நேரத்​தில் ஆதர​வும்​, ஒத்​துழைப்​பும்​ அளிப்​பது மிக அவசி​யம்​.

இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...