மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக படிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவின் மைய குழு கூட்டம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் செய்தியாளர்களிடம் கூறும்பாேது, “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அனைத்து துறை வளர்ச்சிக்கும் பெரும் பங்கு வகிக்கும் வகையில் உள்ளது. பல்வேறு துறைகளில் புதிய சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக வங்கி துறை வளர்ச்சிக்காக குழுக்கள் அமைக்கப்பட்டு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோன்று விவசாய, மீன் வளர்ப்பு , கால்நடை வளர்ப்பு துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் கொண்டு வர இருக்கிறது.
இந்தியாவில் 7 நகரங்களுக்கு அதிவேக ரயில் சேவை வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அதில் இரண்டு தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்ட இருக்கிறது. சாலைகள் அமைக்கவும், சூரிய ஆற்றல் மூலம் சோலார் உற்பத்தியை பெருக்கவும், நீர்வழி ஆற்றல் மூலம் புதிய நீர்வழிப் பாதைகளை கண்டறியவும் 17 உயிர் காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரிச்சலுகை அளிக்கப்பட்டு இருக்கின்றன. பல மருந்துகள் விலை குறைக்கப்பட்ட இருக்கிறது. மேலும், உள்நாட்டு முதலீட்டில் 10 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக அதிகரிக்கும்.
மேலும், மாவட்டங்கள் தோறும் பெண்கள் தங்கும் விடுதி அமைக்கப்படவுள்ளது. மகாத்மா காந்தி கிராம சுயராஜ் திட்டத்தின் மூலம் காதி பவன்களில் கிராமப்புற பெண்கள், விவசாயிகள் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதன் மூலம் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேங்காய் மகசூலை அதிகரிக்க 400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 11 மருத்துவ சுற்றுலா மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ உள்கட்ட அமைப்பு வசதியை நாம் மேம்படுத்தி உள்ளோம். சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பத்தாயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நிதிநிலை அறிக்கை முழுமையாக படித்து விட்டு பேசட்டும். காங்கிரஸ் அரசை விட நாங்கள் 400 சதவீதம் வரை தமிழ்நாட்டுக்கு நிதியை உயர்த்தி கொடுத்துள்ளோம்” என தெரிவித்தார்.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |