அந்த பெயர் ஈரானிய கடலில் நிற்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலுக்கு இடபட்டு, அது ஈரானிய மக்களின் விடுதலைக்கு உதவும் என அமெரிக்கா அறிவிருக்கும் காலமிது, இன்றல்ல நாளையல்ல என்றும் அமெரிக்க மக்களின் நன்றிக்குரிய பெயர் அந்த ஆபிரஹாம் லிங்கன்
அமெரிக்க அதிபர்களில் மறக்க முடியாதவர் ஆப்ரஹாம் லிங்கன், இன்று வலிமையான மிக பரந்த அமெரிக்காவாக அந்தவல்லரசு உலகை ஆள அவர்தான் முக்கிய காரணம் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து எத்தனையோ தோல்விகளை தன் சொந்த வாழ்விலும் தொழிலிலும் அரசியல் வாழ்விலும் கண்டு வென்றவர்
ஒல்லியான உருவம், அவலட்சணமான முகம், பின்புலமில்லா குடும்பம், சிறக்காத குடும்ப வாழ்வு என்றாலும் போராடி வென்றவர், போராடி பெரும் உயரம் தொட்டவர் அவர் இல்லையென்றால் இந்த பரந்த மிகபெரிய அமெரிக்கா இல்லை அது பல துண்டுகளாக உடைந்திருக்கும், இன்றிருக்கும் செல்வாக்கு அவர்களுக்கு வராது “சமூக நீதி” எனும் வார்த்தை அவர் கொடுத்தது.
அமெரிக்க மக்களால் மட்டுமல்ல, உலக மக்களாலும் மறக்கவே முடியாதவர் அவர். அதற்கு ஒரே காரணம் அவர் செய்த அடிமை ஒழிப்பு புரட்சி.
இந்து மதத்தை சாடுவோர் எல்லோரும் சொல்லும் ஒன்று சாதி சார்ந்த மதம், சக மனிதனை மதிக்காமல் தள்ளிவைக்கும் மதம் என்பது இதைத்தான் திராவிட கும்பல், மதமாற்ற கும்பல், கம்யூனிச நக்சல் கும்பல் , சில சினிமா சுருட்டல் குமபல் ஏல்லாம் சொல்லிகொண்டே இருக்கும் இந்துமதம் தொழில் ரீதியாக மானுடர்களை வகுத்திருந்தது ஆனால் அடிமை என யாரையும் வைத்ததில்ல்லை, சாதி ரீதியான் பாகுபாடு அங்கே இல்லை அங்கே ஷத்திரியன் பிராமண தர்மத்தை ஏற்று பிராமணனாக முடிந்தது, சூத்திரன் ஷத்திரியனாக முடிந்தது, வைசிகன் குருவாக முடிந்தது
பிறப்பினால் அல்ல தொழிலால் அவனவன் ஆற்றலினால் அறிவால் அவனுக்குரிய இடத்தை கொடுத்தது இந்துமதம்
பிறப்பினால் அது யாரையும் தாழ்த்தவுமில்லை, வாரிசு அரசியல் போல் பிறப்பினால் கொண்டாடவுமில்லை
அப்படியான இந்துமதம் மனிதனை சாதி என அடிமைபடுததி சுரண்டியது என்பவர்கள் அடிமை முறையினை பற்றி பேசவே மாட்டார்கள் அடிமை முறையின் தாயகம் மேற்காசியா ஐரோப்பா எல்லைகள். அங்கிருந்துதான் அடிமை முறை தோன்றிற்று
ஒரு மனிதனை அடிமை என ஆடுமாடு போல் சந்தையில் விற்கலாம் வாங்கலாம், அவனுக்கு குடும்பம் இருந்தாலும் மாட்டுமந்தை போல் பிரிந்து வாங்கலாம், அவனுக்கு உரிமை இல்லை, சொத்து இல்லை, கல்வி இல்லை, மாடுகளை போல் அவன் உழைக்க வேண்டும், உணவு மட்டும் கொடுப்பார்கள், வேலை செய்யாவிட்டால் மாட்டுக்கு நடப்பதெல்லாம் அவனுக்கு நடக்கும்
பின் விற்பார்கள் இன்னொருவன் வாங்குவான் அதாவது மாட்டுக்கும் மனிதனுக்கும் வித்தியாசமே இல்லாத வகையில் இந்த கொடுமை இருந்தது, இந்த ச்ந்தை மேற்காசியாவில் ஐரோப்பாவில் இருந்தது
ஆப்ரிக்காவுக்கான கடல்வழி வந்தபின் ஆப்ரிக்கர்க்ளை பிடித்து சென்று விற்கும் வியாபாரம் பெருகிற்று, ஆண்களும் பெண்களும் சிறார்களுமாக இப்படி ஐரோப்பியர் விற்றார்கள், கப்பல் கப்பலாக விற்றார்கள் இதனை கிறிஸ்தவம் மாற்றவில்லை, இஸ்லாம் மாற்றவில்லை, பவுத்தமும் சமணமும் மாற்றவில்லை ஆச்சரியமாக இந்துமதத்தில் அடிமை முறை இல்லை, இது தன்னில் வேலை பார்ப்பவனுக்கும் பூரண சுதந்திரம் வழங்கியது, ஒருவன் வேலை பிடிக்கவில்லை என்றால் மாறலாம் அவனுக்கு இந்துமதத்தில் தடை ஏதும் இல்லை, இந்துமதத்தில் கொடிய அடிமை வழக்கம் ஒருகாலமுமில்லை ஆனால் கிறிஸ்தவத்தில் யூதத்தில் இஸ்லாமில் இருந்தது இந்தியாவில் அடிமைசந்தைகள் அந்நியர் ஆண்ட காலங்களில் வந்தன, ஏகபட்ட அடிமைகள் இங்கு வாங்கபட்டனர், அப்படியே ஆப்கானியர் இந்துக்களையும் ஆண்களாக பெண்களாக பிடித்து விற்றும் கொண்டிருந்தார்கள்
மிகபெரிய மனித அவலம் இங்கு இருந்தது உலகெல்லாம் இருந்தது போல் இருந்தது அது இந்த தேசம் இந்துதேசமாக இருந்தவரை இல்லை, என்று இங்கே சுல்தானியங்களும் ஐரோப்பிய காலணிகளும் வந்ததோ அன்று வந்தது
இந்துக்களுக்கு இது கொடுமையானது பரிதாபமானது, மனிதனை மனிதன் அடிமை என விற்கும் கொடுமைகளை இந்துமதம் எதிர்த்ததுஆம், கவனியுங்கள் போப் எதிர்க்கவில்லை இதர மதவாதிகள் எதிர்க்கவே இல்லை இயேசு பாவிகளை மீட்க வந்தார் என்பவர்கள் கூட அடிமைகளை மனிதர்களாக கருதவே இல்லை, பிரிட்டிஷ்காரன் மானிட நேயம் கொண்டிருந்தான் கல்வி மருத்துவம் தந்தான் எல்லாம் கிறிஸ்தவம் என்பதெல்ல்லாம் பெரிய பொய் அப்படி கிறிஸ்தவம் மானுட நேயம் பேசியிருந்தால் அடிமை முறை என்றோ அகற்றபட்டிருக்க வேண்டும் அனால் போப் மற்றும் பாதிரி போதகன் ஆசியில் அழகாக தொடர்ந்தது
மார்ட்டின் லுத்தர் புரட்சி செய்து கிறிஸ்தவ சபைகள் வந்தபோதும் அடிமை முறை தொடர்ந்தது கிறிஸ்து அடிமைகளுக்கு மட்டும் வரவே இல்லை காரணம் அடிமைகள் மனிதர்களே இல்லை எனும் அளவு அவர்கள் மதம் சொல்லிற்று
இஸ்லாமிலும் இதே காட்சி உண்டு
இந்த உலகில் 15ம் நூற்றாண்டில் அடிமை முறை உச்சத்தில் இருந்தபோது முதன் முதலில் ஒரு இந்து மன்னனே அதை ஒழித்தான்
எங்கள் மதம் உயர்ந்தது, இங்கு எல்லா மானுடருமே ஈஸ்வரன் சொரூபம், மனிதனை மனிதன் அடிமையாக வைப்பதை ஒரு இந்துவாக நான் அனுமதிக்கமாட்டேன் என ஒரு இந்துமன்னன் சீறி எழுந்தான்அவன் விரசிவாஜி
ஆப்ரஹாம் லிங்கனுக்கு 200 ஆண்டுக்கு முன்பே அவன் இந்துசாம்ராஜ்யத்தில் அடிமை முறை ஒழிப்பை செய்திருந்தான
அதை பம்பாய் பக்கம் செய்தான், கோவாவில் செய்தான், கொங்கனில் செய்தான் மிக முக்கியமாக சென்னை வரை படை எடுத்து வந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்து கொண்டிருந்த மனித அடிமை சந்தையினை ஒழித்து எல்லா அடிமைக்கும் விடுதலை கொடுத்தான் உலகில் மனித அடிமைதனத்தை முதலில் ஒழித்தவன் ஒரு இந்துமன்னன், அவன் வீரசிவாஜி
இன்று சட்டபேரவை நடக்கும் சென்னை ஜார்ஜ் கோட்டையில், கிறிஸ்தவர்கள் வராவிட்டால் ஐயகோ என பலர் கதறி சுட்டிகாட்டும் அந்த ஜார்ஜ் கோட்டையில் அடிமைகள் வியாபாரம் பெரிதாக இருந்தது
வீரசிவாஜி எனும் இந்துமன்னனே அதை ஒழித்தான், அதை கிறிஸ்தவ துறவிகள் தடுக்கவில்லை அரசர்கள் தடுக்கவில்லை சுல்தான்கள் தடுக்கவில்லை சாதி ஒழித்தான் என பிரிட்டிஷ்காரனை காட்டுவோர் அவர் ஏன் அடிமைதனத்தை ஒழிக்கவில்லை என்றால் வாயே திறக்கமாட்டார்கள் சக மனிதனை தெய்வமாக வணங்கும் இந்துமதமே அடிமைதனத்தை ஒழித்தது சிவாஜி தன் ஆட்சியில் 1674ல் அதை ஒழித்தான் , சென்னையில் 1677ல் ஒழித்தான்
அவனே அடிமை முறை ஒழிப்பை தொடங்கிவைத்தான் பின் அது ஆங்காங்கே எழுந்து சுதந்திர அமெரிக்காவில் அந்த கோரிக்கை வந்து, 1863ல் அதாவது சிவாஜிக்கு பின் 200 ஆண்டுகள் கழித்துத்தான் அமெரிக்காவில் லிங்கன் மூலம் சட்டமானது
பின் உலகெல்லாம் கம்யூனிசம், ஜனநாயகம் என வந்தபோது உலகில் இருந்து அடிமை முறை ஒழிக்கபட்டது
வழக்கமான ஐரோப்பிய மேம்போக்கு கர்வத்தில் அடிமை முறையினை ஒழித்தவர் லிங்கன், அடிமைமுறை ஒழிக்க வழிகாட்டிய தேசம் அமெரிக்கா என சொல்லிகொள்ளலாம்
ஆனால் முதன் முதலில் அடிமைமுறையினை ஒழித்தவன் இந்துமன்னன் வீரசிவாஜி அவனே உலகுக்கு வழிகாட்டினான்
அமெரிக்காவில் கிறிஸ்தவ அரசர் இல்லை, போப் இல்லை இதனால் அங்கே அடிமை ஒழிப்பு சாத்தியமாயிற்று, அவர்கள் இருந்திருந்தால் இது சாத்தியமே இல்லை ஆம், கிறிஸ்தவம் உள்லிட்டவை அப்படியான மதம் அவை அடிமைதனத்தை அனுமதித்தன பைபிளிலே காட்சி உண்டு
இந்துமதம் எக்காலமும் அடிமை முறையினை எதிர்த்த மதம், அந்நியர் ஆட்சியில் இங்கே அடிமைசந்தைகள் வந்தபோது சிவாஜி எனும் இந்துமன்னன் அதை தன் தர்மத்தின் வழி இது அல்ல என நீக்கினான் அவ்வகையில் லிங்கனுக்கு வழிகாட்டியது இந்து அரசன் வீரசிவாஜிதான், உலகில் அடிமைமுறையினை ஒழித்த மதம் இந்துமதமேதான்
இந்துமதம் சாதி மதம், மனிதனை ஒடுக்கும் மதம் என சொல்லும் பதர்கள் யாராவது அடிமை முறையினை கிறிஸ்தவம் ஏன் ஒழிக்கவில்லை, இஸ்லாமிய சுல்தான்கள் ஏன் ஒழிக்கவில்லை அவர்கள் மதவாதிகளும் ஏன் ஒழிக்கவில்லை என கேட்டால் பதிலே சொல்லாது இந்துமதம் என்பது வாழ்வியல் தர்மம், அந்த தர்மத்தில் அடிமைமுறைக்கு ஒரு காலமும் அனுமதி இல்லை
இன்று ஆப்ரஹாம் லிங்கனின் பிறந்த நாள், அடிமை முறையினை ஒழித்தவர் என உலகம் கொண்டாடுகின்றது, கொண்டாடட்டும்
ஆனால் நல்ல இந்து அதுவும் இந்துஸ்தான் இந்து அதை சொல்வதில் அர்த்தமில்லை காரணம் இந்துதர்மம் ஒருகாலமும் அடிமை முறையினை கொண்டிருக்கவுமில்லை, வரவேற்கவுமில்லை
அந்நிய ஆட்சியால் அது இந்துஸ்தானத்துக்கு வந்தபோது கூட உலகிலே முதல் முறையாக ஆப்ரஹாம் லிங்கனுக்கு 200 ஆண்டுக்கு முன்பே அடிமைமுறையினை ஒழித்தவன் இந்துமன்னன் வீரசிவாஜி ஆக உலகுக்கே அடிமைமுறை ஒழிப்பில் வழிகாட்டியது இந்துமதம், முதலில் அதை செய்தவனும் இந்து மன்னனே, இதனை இந்துக்கள் உணர்தல் அவசியம், அது அவர்களின் பெருமையும் கவுரவமும் கூட
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |