மக்களவையில் இன்று, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஆற்றிய உரையில், 2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கும் என்பது குறித்து, விரிவான விளக்கத்தை அளித்துள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். “விரைவான சீர்திருத்த நடவடிக்கைகள், எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, திறன் மேம்பாடு, அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான உத்வேகம், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி ஆகியவை பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உதவிடும் என்று நிதியமைச்சர் எடுத்துரைத்ததாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மக்களவையில் உரையாற்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு பட்ஜெட் நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கும் என்பது குறித்து விரிவான விளக்கத்தை அளித்தார். சீர்திருத்த எக்ஸ்பிரஸ், எம்எஸ்எம்இக்களுக்கான ஆதரவு, திறன் மேம்பாடு, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பிற்கான உந்துதல், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி மற்றும் பலவற்றை அவர் வலியுறுத்தினார்.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |