டிஜிட்டல் நாணயத்தை அடிப்படையாகக் கொண்ட பொது விநியோக முறையை தொடக்கி வைத்த அமித்ஷா

குஜராத்தின் காந்திநகரில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை அடிப்படையாகக் கொண்ட வெளிப்படையான, நவீன மற்றும் எளிமையான பொது விநியோக முறையை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியால் ஊக்குவிக்கப்பட்டு, டிஜிட்டல் இந்தியா தற்போது உணவு மற்றும் விநியோக முறைக்கு விரிவடைந்துள்ளது என்றார். நாட்டின் வளங்கள் மீதான முதலாவது உரிமையை ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடி சமூகங்களுக்குப் பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என்று அவர் கூறினார். முன்பெல்லாம், இந்தியாவில் 60 கோடி மக்களின் முழு குடும்பங்களுக்கும் ஒரு வங்கிக் கணக்கு கூட இல்லை என்றும், ஆனால் பிரதமர் மோடி தலைமையில், உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதி இப்போது இந்தியாவில் நடைபெறுகிறது என்றும் அவர் கூறினார். அதே டிஜிட்டல் இந்தியா இப்போது நாட்டின் ஏழைகளுக்கு மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்கும் களத்தில் நுழைகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த நடைமுறை ஏழைகளுக்கு ரேஷன் வழங்குவதில் ஊழலை முற்றிலுமாக நீக்கும் என்று திரு ஷா கூறினார்.

35 நொடிகளில் 25 கிலோ கிராம் உணவு தானியங்களை விநியோகிக்கும் ‘அன்னபூர்ணா’ எந்திரமும் இன்று தொடங்கிவைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அடுத்த 3-4 ஆண்டுகளில் நாடு முழுவதும் இந்த முறை செயல்படுத்தப்படும் என்றும் இதனால் உணவு தானிய விநியோக முறை முற்றிலும் வெளிப்படையானதாக இருக்கும் என்றும், இது செயல்படுத்தப்பட்ட பின், நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையும் 5 கிலோ கிராம் இலவச உணவு தானியங்களைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார். ‘அன்னபூர்ணா’ எந்திரம் சிறந்த தரம், துல்லியமான அளவு, வெளிப்படையான விநியோகத்தை உறுதி செய்ய உதவும் என்று அவர் மேலும் கூறினார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, துவாரகா முதல் காமாக்யா வரை – நமது பரந்து விரிந்த நாடு முழுவதும் படிப்படியாக இந்த முறை செயல்படுத்தப்பட வேண்டும் என்று அமித்ஷா கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...