வளர்ந்த நாடாக உருவாக நாங்கள் ஆவலுடன் உள்ளோம் என்பதை இந்த பட்ஜெட் காட்டுகிறது -பிரதமர் மோடி பெருமிதம்

”இந்த பட்​ஜெட் கட்​டா​யத்​தி​னால் உரு​வானது அல்ல. தயார் நிலை மற்​றும் உத்​வேகத்​தால், வளர்ந்த நாடாக உரு​வாக நாங்​கள் ஆவலுடன் உள்​ளோம் என்​பதை காட்​டும் பட்​ஜெட்” என பிரதமர் மோடி கூறி​யுள்​ளார்.

இந்த ஆண்டு மத்​திய பட்​ஜெட் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: “நமது நாட்​டில் திறன் மிகு இளைஞர்​கள் அதிகளவில் உள்​ளனர். குறைந்த பணவீக்​கம் மற்​றும் பொருளாதார நிலைத் ​தன்​மை​யுடன் கூடிய வலு​வான வளர்ச்சியில் நாங்​கள் கவனம் செலுத்தி வரு​கிறோம். விண்​வெளி,
விளை​யாட்​டு, ஸ்டார்ட்​-அப்​கள் எனப் பல்​வேறு துறை​களில் நமது இளைஞர்​கள் சாதனை படைத்து வரு​கின்​றனர்.

இந்த முன்​னேற்​றங்​களின் காரண​மாக, மக்​கள் தற்​போதைய சூழலை, இந்​தி​யா​வுக்​கான ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க வாய்ப்​பாகப் பார்க்​கிறார்​கள். இந்த முன்​னேற்​றங்​கள் வேகம் எடுத்​துள்ள நிலை​யில், நாடு 75-வது சுதந்​திர தினத்தை கடந்துள்ளது. ஒரு வளர்ந்த நாட்டை உரு​வாக்​கு​வது என்​பது வெறும் உள்கட்டமைப்பு அல்​லது பொருளா​தா​ரம் சார்ந்​தது மட்​டுமல்ல, அது தூய்மை உட்பட பல சமூகப் பழக்​க வழக்​கங்​கள் சார்ந்​தது என்​ப​தை​யும் மக்​கள் அறிந்​துள்​ளனர்.

இந்த பட்​ஜெட் கட்​டா​யத்​தி​னால் உரு​வான கணக்கு புத்தக பட்ஜெட் அல்ல. தயார் நிலை மற்​றும் உத்​வேகத்​தால் வளர்ந்த நாடாக உரு​வாக நாங்​கள் ஆவலுடன் உள்​ளோம் என்​பதை பிரதிபலிக்​கும் பட்​ஜெட்.

எனவே, இந்த பட்​ஜெட்டை வெறும் ‘பட்​ஜெட் 2026’ ஆக மட்​டும் பார்க்​காமல், 21ம் நூற்​றாண்​டின் 2-வது காலாண்​டின் முதல் பட்​ஜெட்​டாகப் பார்க்க வேண்​டும். நாம் இப்​போது எடுக்கும் முடிவு​கள் 2047-க்​குள் வளர்ச்​சி​யடைந்த பாரதம் உரு​வாக அடித்​தளம் அமைக்​கின்​றன. வளர்ச்​சி​யடைந்த பாரதத்தை உரு​வாக்​கு​வ​தில் பெண்​கள் முக்​கிய பங்​காற்​று​வர் என்ற நம்​பிக்கை எனக்கு உள்ளது.

பெண் குழந்​தைகள் பிறப்​பது முதல், அவர்​களின் எண்​ணங்​கள் நிறைவேறும் வரை முன்​னேற்​றத்​துக்கு தேவை​யான நடவடிக்கைகளை​யும், சீர்​ திருத்​தங்​களை​யும் அரசு செய்​து​ கொண்​டிருக்​கிறது. கடந்த சில ஆண்​டு​களாக, அறி​வியல் மற்​றும் தொழில்​நுட்ப துறை​களில் பெண்​கள் முன்​னணி​யில் உள்​ளனர் என்​பது பெரு​மை​யான விஷ​யம். விண்​வெளித்​துறை​யாக இருக்கட்​டும் அல்​லது ஸ்டார்ட் அப் நிறு​வனங்​களாக இருக்​கட்​டும், அனைத்து துறை​களி​லும் பெண்​கள் சிறப்​பாக பணியாற்றுகின்றனர்.

2014 முதல் முந்​தைய நிர்​வாகங்​கள் விட்​டுச் சென்ற கட்​டமைப்பு இடைவெளி​களை நாங்​கள் சரி செய்​துள்​ளோம், பெண்​களின் பங்களிப்பை வலுப்​படுத்​தி​யுள்​ளோம். நமது விவ​சா​யிகளின் கண்​ணி​யத்​தை​ உறுதி செய்​துள்​ளோம். இந்த பட்​ஜெட் வேகத்தை அதி​கரிக்​க​வும், வேக​மாக மாறிவரும் உலகின் வாய்ப்​பு​களுக்கு ஏற்ப நமது இளைஞர்​களைத் தயார்​படுத்​தும் நோக்​கிலும்​ உருவாக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு பிரதமர்​ மோடி கூறி​னார்​.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...