வலியையான பிரதமர் வலிமையான பாரதம்

சீனாவை ஆட்டம் காண வைக்கப்போகும் தமிழகத்தின் கடைக்கோடி நகரம்; உலக அளவில் சாதிக்கும் தமிழன்; இனி உலகுக்கே நாம் தான் ராஜா செமி கண்டக்டர் துறையில்..! நாட்டில் இதுவரை செய்யாத முயற்சியாக செமிகண்டக்டர் தயாரிக்க ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை மோடி அரசு தீட்டியுள்ளது.

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், இப்போது உலகமே செமி கண்டக்டர்கள் மூலமாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. கார்கள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், மொபைல்கள் என நம்மை சுற்றியுள்ள எல்லா சாதனங்களும் செமி கண்டக்டர்கள் இல்லாமல் தயாரிக்க முடியாது.
அப்படிப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த செமி கண்டக்டர் தயாரிப்புக்கு பெரிய அளவில் எதிர்காலம் உள்ளது. சுருக்கமாக சொன்னால், எந்த நாடு இப்போதே செமி கண்டக்டர் உற்பத்திக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்கிறதோ, எதிர்காலத்தில் அவை அசைக்க முடியாத உலக சக்தியாக மாறும்.

அந்த வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் தொலைநோக்குடன் SPECS என்ற திட்டத்தையும், Production Linked Incentive (PLI) எனப்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்க திட்டத்தை செமி கண்டக்டர்கள் தயாரிப்புக்காக தொடங்கியுள்ளது.செமி கண்டக்டர்களுக்கான உலகளாவிய தேவையை கருத்தில் கொண்ட சீனா, தொண்ணூறுகளில் செமிகண்டக்டர் உற்பத்தியை தொடங்கியது. ஆனால் காங்கிரஸ் தனக்கு ஆதாயம் இல்லை என்பதால், இந்த துறையை நம் நாட்டில் மொத்தமாக நசுக்கியது.

செமி கண்டக்டர் மற்றும் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மோடி அரசு ரூ.76,000 கோடி ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. இதுவரை செமிகண்டக்டர் துறையில் அமெரிக்காவும் சீனாவும் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா இப்போது தான் இந்தத் துறையில் நுழைந்துள்ள நிலையில், தமிழக நகரம் ஒன்று இதில் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது.பல வல்லுநர்கள் பார்வை இந்த நகரம் பக்கம் திரும்பியுள்ள நிலையில், இது சர்வதேச நகரமாகச் சீக்கிரமே மாறும் வாய்ப்பு உருவாகி உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, தமிழ்நாட்டின் இந்தச் சிறிய நகரிலிருந்து செமிகண்டக்டர் ஸ்டார்ட்அப் அறிவிப்பு வரும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், இப்போது மெல்ல மெல்ல தென்காசி நகரம் செமிகண்டக்டர் ஸ்டார்ட்அப் ஹப்பாக மாறி வருகிறது. விவசாயத்துக்கும், குற்றால சீசன் சுற்றுலாவுக்கும் பெயர் பெற்ற தென்காசி, இப்போது சிப் வடிவமைப்பு மையமாக மாறி வருகிறது.

அமெரிக்காவில் இன்டெல் நிறுவனத்தின் முன்னாள் செமிகண்டக்டர் இன்ஜினியரிங் இயக்குநர் ஆனந்தன் அய்யாசாமி, தென்காசி மாவட்டத்தில் “தென்காசி செமிகண்டக்டர்கள்” (Tenkasi Semiconductors) என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். தென்காசி போன்ற ஒரு சிறிய நகரத்தில் இத்தகைய முயற்சி அசாதாரணமானது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏனெனில், செமிகண்டக்டர் சிப் வடிவமைப்பு என்பது சாதாரண வேலை இல்லை. வழக்கமான ஐடி வேலைகளைக் காட்டிலும் சிக்கலானது. சிப் வடிவமைப்பிற்கு அதிக நிபுணத்துவம் தேவைப்படும். மேலும், சர்வதேச வல்லுநர்களும் தேவைப்படுவார்கள்.
இதன் காரணமாகவே தென்காசி செமி செமிகண்டக்டர் நிறுவனத்தின் முயற்சி உற்று நோக்கப்படுகிறது. இப்போது வெளிநாடுகள் மற்றும் வெளி நகரங்களில் பணிபுரிந்து வந்த வல்லுநர்கள் தென்காசியை நோக்கி வருகிறார்கள்.
செமிகண்டக்டர் துறையில் சிப் உற்பத்தி (fabrication) மற்றும் சிப் வடிவமைப்பு (design) என இரு முக்கிய பிரிவுகள் உள்ளன. சிப் உற்பத்தி என்பது பெரிய தொழிற்சாலைகளில் செமிகண்டக்டர் சிப்களை தயாரிப்பதைக் குறிக்கிறது. இதற்கு அதிக முதலீடும், பிரமாண்டமான உள்கட்டமைப்பும் தேவைப்படுவதால், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய உற்பத்தி ஆலைகளை இயக்க முடியும்.

எனவே, தென்காசி சிப்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தாமல், சிப் வடிவமைப்பில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம், சிப்பின் டிஜிட்டல் ப்ளூபிரிண்ட் அல்லது வடிவமைப்பை உருவாக்கி, அதைக் குஜராத்தில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற உற்பத்தி ஆலைகளுக்கு அனுப்ப முடியும். தேவை என்றால் வெளிநாடுகளில் கூட இதை உற்பத்தி செய்யலாம். செலவு அதிகமாகும் என்பதால் உற்பத்தி ஆலையைக் கட்டுவதற்குப் பதிலாக சிப் வடிவமைப்பில் கவனம் செலுத்த ஆனந்தன் முடிவு செய்துள்ளார்.

மேலும், ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தென்காசியில் ஒரு வலுவான தொழில்நுட்பச் சூழலை உருவாக்கி வருகிறார். உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களைக் கிராமங்களிலிருந்தும் சிறிய நகரங்களிலிருந்தும் உருவாக்க முடியும் என்று அவர் நம்புகிறார். 2011-ல் தென்காசி அருகே மத்தளம்பாறை என்ற கிராமத்தில் வெறும் ஆறு ஊழியர்களுடன் ஒரு சிறிய அலுவலகத்தைத் திறந்தார் ஸ்ரீதர் வேம்பு.

கிராமப்புறங்களில் சர்வதேச தரத்தில் திறமையான ஊழியர்கள் இருக்க மாட்டார்கள் எனப் பலரும் இந்த முயற்சியை முடக்க பார்த்தனர். சென்னை அல்லது பெங்களூர் போன்ற பெரிய நகரங்களே தொழில்நுட்ப நிறுவனங்களுக்குச் சரியாக இருக்கும் என்று பலரும் கருதினர். ஆனால், ஜோஹோ அதை மாற்றி காட்டியது. பெரு நகரங்களில் இருந்து ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்களை அடையாளம் காண்பதில் ஜோஹோ கவனம் செலுத்தியது. இன்று தென்காசி பிராந்தியத்தில் சுமார் 1,200 பேருக்கு ஸோஹோ வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்த அடிப்படையிலேயே தென்காசியில் செமிகண்டக்டர்கள் நிறுவனம் உருவாகிறது. விரைவில் சர்வதேச ஐடி சந்தையில் தென்காசி தனி முத்திரை பதிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. வலிமையான பிரதமர் அமைந்தால்; நாடு அனைத்து துறைகளிலும் வளமாகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...