சீன எல்லைக்கு அருகை இந்தியா செய்த தரமான சம்பவம்; அவசர காலத்தில் விமானங்கள் தரையிறங்கும் வகையில் அமைக்கப்பட்ட சாலை; அதிர்ச்சியில் சீனா..!
சீன எல்லைக்கு அருகே அவசர காலங்களில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்கும் ஏதுவாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை அசாமின் மோரான் என்ற இடத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் முறையாக தரையிறங்கி இந்த வசதியை பிரதமர் நரேந்திர மோடி 17-2-2026 அன்று திறந்து வைத்தார்.
சீனாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த சாலையில் அவசர காலங்களில் போர் விமானங்களை தரையிறக்க முடியும். இதன் மூலம் அவசர காலங்களில் போர் விமானங்களை சீன எல்லைக்கு அருகே நிறுத்த முடியும்.இந்த சாலை திப்ருகர் மாவட்டத்தில், மோரன் புறவழிச்சாலையில் இது அமையப்பெற்றுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 2-ல் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இறங்குதளம் மொத்தம் 4.2 கிலோமீட்டர் நீளம் கொண்டது. தேசிய அவசர காலங்களில் இது பயன்படும். மனிதாபிமானப் பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இயற்கை பேரிடர்கள் போன்ற காலங்களில் அவசர தேவைகளுக்கு இதை பயன்படுத்தும். அது மட்டும் இன்றி, ராணுவ விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்களும் இதை பயன்படுத்தலாம். இது மாற்று ஓடுபாதையாகவும் செயல்படும்.
100 கோடி செலவில், இந்திய விமானப்படை இந்த சாலையை வடிவமைத்து கட்டமைத்துள்ளது. 40 டன் வரையிலான போர் விமானத்தையும், 74 டன் எடை வரையிலான பயணிகள் விமானமும் இந்த சாலையயை பயன்படுத்த முடியும்.
சீனாவின் எல்லையில் இருந்து 300 கி.மீ., மியான்மரில் இருந்து 200 கி.மீ. தொலைவிலும் இந்த சாலை அமைந்துள்ளது பாதுகாப்பு ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நாட்டின் பாதுகாப்புத் திறன் வலுவடையும். இப்பகுதிக்கு இது கூடுதல் பாதுகாப்பு திறனை வழங்கும்.
பிரதமர் மோடி அசாம் சென்று திப்ருகார் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் சாபுவா விமானப்படை தளத்திற்குச் சென்றார். பின்பு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மோரன் தளத்திற்கு சென்றார். இதையடுத்து, இந்திய விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட்டார். பின்னர் போர் விமானத்தில் வந்த மோடி, அந்த தேசிய நெடுஞ்சாலையை திறந்து வைத்தார். மோடி பயணித்த அந்த விமானம் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் தரையிறங்கியது.
இந்த சாலையில் போர் விமானங்களை இறக்கும் சோதனை ஓட்டம் புதன்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றன. உள்ளூர் மக்கள் பெருமளவில் திரண்டு இந்த சோதனை ஓட்டத்தை பார்த்தனர்.
கடந்த 2021 நவம்பரில் பிரதமர் மோடி ஒரு இதே போன்ற ஒரு சாலையை திறந்து வைத்தார். உத்தரப்பிரதேசத்தின் பூர்வாஞ்சல் விரைவுச்சாலையில் அந்த அவசரகால தளம் உள்ளது. அசாமில் அமைந்துள்ள இந்த புதிய விமான இறங்குதளம் நாட்டின் தற்காப்புத் திறனை மேம்படுத்தும். அவசர காலச் சூழ்நிலைகளைச் சமாளிக்க உதவும். இது இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியமானது. பாதுகாப்புத் திட்டங்களில் மிக முக்கிய படிநிலையாகும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனா, எல்லையில் அவ்வப்போது இந்தியாவுடன் வாலாட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அருணாசலபிரதேசத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என உரிமை கொண்டாடும் சீனா, அடாவடியாக எல்லையில் கட்டுமானங்களை அதிகரித்து வருகிறது.
சீனாவுடன் போர் பதற்றம் ஏற்பட்டாலோ மற்றும் அவசர காலங்களில் எளிதில் தடவாளங்களை எடுத்து செல்லவும் நிவாரண பொருட்களை கொண்டு செல்லம் முடியும். அதேபோல, மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதியிலும் இந்த சாலை வருவதால் நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த நெடுஞ்சாலை இருக்கும். பிரதமர் மோடியின் ஆட்சியில் பாதுகாப்பு துறை மிக வலுவாக உருவாக்கப்பட்டு வருவதற்கு இதுவே சிறந்த ஆதாரம்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |