போர் ஹெலிகாப்டர் பிரச்சாந்த் நாட்டின் பாதுகாப்புத் திறனுக்கு பெருமிதம் சேர்க்கிறது – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (27.02.2026) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விமானப்படைத் தளத்தில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் பிரச்சாந்தில் பயணம் மேற்கொண்டார். முன்னதாக அவர், கடந்த 2023 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் முறையே சுகோய் 30 மற்றும் ரஃபேல் போன்ற போர் விமானங்களில் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற செயல்பாடுகள் இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை வடிவமைக்கும் நடவடிக்கைகள் உத்வேகம் பெற காரணமாக அமைந்தது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, குரூப் கேப்டன் நயான் சாந்திலால் பஹுவாவுடன் இந்த ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். இந்திய விமானப்படைத் தளபதி திரு ஏ பி சிங் மற்றும் கமாண்டர் கேப்டன் திரு ஏ மகேந்திர ஆகியோர் மற்றொரு ஹெலிகாப்டரில் அவருடன் பயணம் மேற்கொண்டனர். சுமார் 25 நிமிடப் பயணத்தின் போது காடிசர் ஏரி மற்றும் ஜெய்சால்மர் கோட்டை மீது ஹெலிகாப்டரில் பறந்து சென்று பீரங்கி இருந்த இலக்கை நோக்கி தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து இந்தப் பயணம் குறித்து பார்வையாளர் புத்தகத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு எழுதிய குறிப்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் “பிரசாந்த்“-ல் பறந்து சென்றது தனக்கு ஒரு சிறந்த அனுபவத்தை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயணம் நாட்டின் பாதுகாப்புத் திறன் மீது ஒரு புதிய பெருமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தப் பயணத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்ததற்காக இந்திய விமானப்படை மற்றும் ஜெய்சால்மர் விமானப்படைத் தளத்தின் குழுவிற்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

இன்று மாலை ஜெய்சால்மரில் நடைபெறும் இந்திய விமானப்படையின் “வாயு சக்தி” பயிற்சியை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பார்வையிடுகிறார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.