பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப். 28 அன்று ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில், ரூ. 16,686 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

அஜ்மீரில், ரூ.16,686 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி, குடிநீர் விநியோகம், சாலைகள், ரயில்வே, நீர்பாசனம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 43 முக்கிய மத்திய மற்றும் மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வரும் சனிக்கிழமை (பிப். 28) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இதில், சுமார் ரூ.8,554 கோடி மதிப்பிலான மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் ரூ.8,132 கோடி மதிப்பிலான மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களும் தொடங்கப்படுகின்றன.

மேலும், ரூ.1,207 கோடி செலவில் அமைக்கப்படும் பண்டிகுய் முதல் ஜெய்ப்பூர் வரையிலான 4 வழி பசுமைவழி விரைவுச்சாலை உள்ளிட்ட ரூ. 4,516 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகள் திட்டங்களையும் அவர் துவங்கி வைக்கின்றார். மாநில அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் தேர்வாகியுள்ள 21,863 இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பணிஆணை வழங்கவுள்ளார்.

இத்துடன், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்யைத் தடுக்க ஹெச்.பி.வி. (HPV) தடுப்பூசி முகாமையும் அவர் தொடங்கி வைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில், ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன் லால் சர்மா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...