உலகளாவிய நன்மைக்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உறுதியேற்போம் – பிரதமர் நரேந்திர மோடி

தேசிய அறிவியல் தினமான இன்று (28.02.2026), நமது நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் ஆராய்ச்சி, புதுமை மற்றும் அறிவியல் ஆர்வத்தின் சிறந்த உணர்வை நாம் கொண்டாடுகிறோம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.

சர் சி.வி. ராமனால் ராமன் விளைவு என்ற புரட்சிகரமான கண்டுபிடிப்பு உருவாக்கப்பட்டதை இந்த நாள் நினைவுகூர்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த ராமன் விளைவு என்ற கண்டுபிடிப்பு இந்திய ஆராய்ச்சியை உலக வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நமது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பது, ஆராய்ச்சிச் சூழல் அமைப்புகளை வலுப்படுத்துவது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை தேசிய வளர்ச்சி மற்றும் உலகளாவிய நன்மைக்காகப் பயன்படுத்துவது என்ற நமது உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் எடுத்துரைத்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“தேசிய அறிவியல் தினமான இன்று, நமது நாட்டை முன்னேற்றப்பாதையில் இயக்கும் ஆராய்ச்சி, புதுமை, அறிவியல் ஆர்வம் ஆகியவற்றின் உணர்வை நாம் கொண்டாடுகிறோம்.

இந்த நாள் சர் சி.வி. ராமனால் உருவாக்கப்பட ராமன் விளைவு என்ற புரட்சிகரமான கண்டுபிடிப்பை நினைவுகூரும் நாளாகும். இந்தக் கண்டுபிடிப்பு இந்திய ஆராய்ச்சியை உலக வரைபடத்தில் உறுதியாக நிலைநிறுத்தியது.

நமது இளைஞர்களை மேம்படுத்துதல், ஆராய்ச்சிச்சூழல் அமைப்புகளை வலுப்படுத்துதல், அறிவியல் – தொழில்நுட்பத்தை தேசிய வளர்ச்சிக்கும் உலகளாவிய நன்மைக்காகப் பயன்படுத்துதல் என்ற நமது இலக்குகளை வலுப்படுத்த மீண்டும் உறுதியேற்போம்.”

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...