“சுகாதாரம் அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதும், கிடைக்கக்கூடியதும், மலிவானதுமாக இருக்க வேண்டும்”-பிரதமர் மோடி

நரேந்தி மோடி 01 மார்ச் 2026 அன்று ஜிப்மர், புதுச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டல புற்றுநோய் மையம் (RCC) கட்டிடத்தை மெய்நிகர் வாயிலாக திறந்துவைத்தார்.

புதுச்சேரியில் நடைபெற்ற பல்வேற மக்கள் நலத்திட்ட துவக்க விழாவில் ஜிப்மர் மண்டல புற்றுநோய் மையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திறந்துவைத்து உரையாற்றிய பிரதமர், “சுகாதாரம் அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதும், கிடைக்கக்கூடியதும், மலிவானதுமாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இந்தக் குறிக்கோள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் சுகாதார கனவுகளை நனவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். புதுச்சேரி மக்களில் யாரும் சிகிச்சைக்காக பிற இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருக்கக்கூடாது என்றும், மாறாக பிற மாநில மக்களே சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். புதுச்சேரி ஒரு முக்கிய மருத்துவ சுற்றுலா மையமாக உருவெடுக்கக் கூடிய திறன் கொண்டது என அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஜிப்மர் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முன்னணி நிறுவனமாக நீண்டகால பாரம்பரியத்தை கொண்டுள்ளதாக் குறிப்பிட்டு, அதன் பிராந்திய புற்றுநோய் மையத்தின் நவீனமயமாக்கல், சுகாதார சேவைத்திறனை கணிசமாக உயர்த்தி, புற்றுநோய் சிகிச்சையில் சிறப்புமிக்க மையமாக அதன் பங்கினை மேலும் வலுப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

ரூ.94.64 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நவீன கட்டிடம், எளிதில் அணுகக்கூடிய, முன்னேற்றமான மற்றும் குறைந்த செலவிலான புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதுடன். தேசிய முக்கியத்துவம் வாயந்த நிறுவனமாக ஜிப்மரின் நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது. 10,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள புதிய மண்டல புற்றுநோய் மையம் கட்டிடம், படுக்கை வசதியை 80-லிருந்து 280-ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய அரசு புற்றுநோய் சிகிச்சை மையங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. நோயாளி மையப்படுத்தப்பட்ட நவீன வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம், நெரிசல் மற்றும் காத்திருப்பு நேரத்தை குறைத்து, புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உள்ளிட்ட மேம்பட்ட சிகிச்சைகளை துரித நேரத்தில் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் அறு நவீன அறுவை சிகிச்சை அறைகள், மேம்பட்ட அறுவை புற்றுநோய் சேவைகளுக்கான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. உயர் பராமரிப்பு பிரிவுகளுடன் கூடிய விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ புற்றுநோயியல் உட்புற சிகிச்சை பிரிவுகள், லுகீமியா நோயாளிகளுக்கான சிறப்பு பிரிவுகள், 14 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகளுடன் வலுப்படுத்தப்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று பிரிவு ஆகியவை இதில் அடங்கும். மேலும், குழந்தைகள் புற்றுநோய் பிரிவு, 40 படுக்கைகள் கொண்ட கீமோதெரபி பராமரிப்பு பிரிவு, மேம்படுத்தப்பட்ட நிவாரண சிகிச்சை சேவைகள் மற்றும் பொதுவான புற்றுநோய்களின் நோய் கண்டறிதல், விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை ஆகியனவும் நிறுவப்பட்டுள்ளன.

பல வருடங்களாக, ஜிப்மர் மண்டல புற்றுநோய் மையம் புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தென் மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து, குறிப்பாக கொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு சேவை செய்து வருகிறது. விரிவுபடுத்தப்பட்ட இந்த மையம், மானியத்துடன் கூடிய புற்றுநோய் சிகிச்சை வழங்கலை மேலும் வலுப்படுத்துவதுடன், ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிரதமரின் நிவாரண நிதி ஆகிய தேசிய சுகாதார திட்டங்களின் மூலம் தகுதியான நோயாளிகள் கட்டணமில்லா அல்லது நிதி உதவி கொண்ட சிகிச்சையை பெறுவதற்கு உதவுகிறது.

தடுப்பு. மேம்பட்ட சிகிச்சை, ஆராய்ச்சி, புனர்வாழ்வு மற்றும் பயிற்சி ஆகிய அனைத்தையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் இந்த விரிவுபடுத்தப்பட்ட மண்டல புற்றுநோய் மையம், ஜிப்மரில் முழுமையான புற்றுநோய் பராமரிப்பு அமைப்பாக உருவெடுத்துள்ளது. உலகத் தரத்திலான புற்றுநோய் சிகிச்சை ஏழை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதற்கான இந்திய அரசின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த முக்கிய முன்னேற்றம் வெளிப்படுத்துகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...