மேற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய சூழல், மிகுந்த கவலை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சு நடத்தினார். இதனைத் தொடர்ந்து, இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தொடர்ந்து அந்த நாடுகளுடன் பேசிவருவதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, “”உலகில் நிலவும் பல பதற்றமான நிலை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு நாங்கள் எப்போதும் அழைப்பு விடுத்துள்ளோம், மேலும் இரண்டு ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து நிற்கும்போது, அமைதிக்கான குரல் இன்னும் வலுவடைகிறது. மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை எங்களுக்கு ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அனைத்து சர்ச்சைகளையும் தீர்க்க இந்தியா ஆதரவளிக்கிறது. பிராந்தியத்தில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக அனைத்து நாடுகளுடனும் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றுவோம்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |