ஓமன், குவைத் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை: இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்

அமெரிக்​கா, இஸ்​ரேல் – ஈரான் இடையி​லான போர் மத்​திய கிழக்கு வளை​குடா நாடு​களில் தீவிரமடைந்து வரும் நிலை​யில், ஓமன் சுல்​தான் மற்​றும் குவைத் இளவரசருடன் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொலைபேசி வாயி​லாக ஆலோசனை நடத்​தி​னார்.

அப்​போது, அங்கு வசிக்​கும் இந்​தி​யர்​களின் பாது​காப்பு குறித்து அவர் தனது கவலை​யைத் தெரி​வித்து அவர்​களின் பாது​காப்பை உறுதி செய்​யு​மாறு அவர் கேட்​டுக்​கொண்​டார். முன்​ன​தாக, திங்​கள்​கிழமை அன்று சவூதி அரேபி​யா, பஹ்ரைன் மற்​றும் ஜோர்டான் நாட்​டுத் தலை​வர்​களு​டன் பிரதமர் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யிருந்த நிலை​யில், நேற்று ஓமன் சுல்​தான் ஹைதம் பின் தாரிக் மற்​றும் குவைத் இளவரசர் ஷேக் சபா அல்​-​காலேத் அல்​-ஹமத் அல்​-​மு​பாரக் அல்​-சபா ஆகியோ​ருடன் இந்​தப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றுள்​ளது.

வளை​குடா பிராந்​தி​யத்​தில் போர் மேகங்​கள் சூழ்ந்​துள்​ள​தால் வான்​ வழிப் போக்​கு​வரத்து முடக்​கம், கச்சா எண்​ணெய் விநியோகத் தடை மற்​றும் எரிசக்தி உள்​கட்​டமைப்​பு​கள் மீதான அச்​சுறுத்​தல் அதி​கரித்​துள்​ளது. இதன் பின்​னணி​யில் நடை​பெற்ற ஆலோ​சனை​யின் போது, வளை​குடா நாடு​கள் மீது நடத்​தப்​படும் தாக்​குதல்​களுக்கு பிரதமர் மோடி கண்​டனம் தெரி​வித்​தார். மேலும், அங்கு வசிக்​கும் ஒரு கோடிக்​கும் அதி​க​மான இந்தியர்களின் பாது​காப்பு மற்​றும் நலன் குறித்து அவர் விரி​வாக கேட்​டறிந்​தார்.

முன்​ன​தாக, ஈரான் மற்​றும் வளை​குடா பிராந்​தி​யத்​தில் நில​வும் மிக மோச​மான சூழல் குறித்து மத்​திய வெளி​யுறவுத் ​துறை அமைச்​சகம் ஆழ்ந்த கவலையை வெளிப்​படுத்​தி​யது. அங்​குள்ள இந்​தி​யர்​களின் பாது​காப்​பு​ தான் தற்​போதைய முக்​கிய முன்னுரிமை என்​றும் அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது.

சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்​மான் மற்​றும் பஹ்ரைன் மன்​னர் ஹமத் பின் ஈசா அல் கலீஃபா ஆகியோ​ருடன் பிரதமர் மோடி பேசுகை​யில், பிராந்​தி​யத்​தில் அமைதி திரும்புவதே இப்​போதைய மிக முக்​கிய​மான தேவை என்​பதை வலி​யுறுத்​தி​னார்.

மேலும், இந்த இக்​கட்​டான காலக் கட்​டத்​தில் அங்​குள்ள இந்தியர்களை பாது​காக்​கும் நடவடிக்​கைகளுக்​காக சவுதி இளவரசருக்கு பிரதமர் தனது நன்​றியைத் தெரி​வித்​துக்​ கொண்டார்​ என்​ப​து குறிப்​பிடத்​தக்​கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...