எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது; மத்திய அமைச்சர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போரிட்டு வரும் ஈரான், ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டது. உலகில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் போக்குவரத்தில், 5ல் ஒரு பங்கு இந்த வழியாகத் தான் நடந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவின் மொத்த எரிபொருள் இறக்குமதியில், 40 முதல் 50 சதவிதம் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத் தான் கொண்டு வரப்படுகிறது.

இப்படிபட்ட சூழலில், இந்த ஜலசந்தியை மூடியிருப்பது இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் எழுந்தது.இந்த நிலையில், இந்தியாவில் உடனடியாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது; இந்தியாவிடம் தற்போது 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் இருப்பு உள்ளது. எனவே, உடனடி தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு கிடையாது. நிலைமையைக் கண்காணிக்க அமைச்சகம் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

இந்தியா தனது எரிபொருள் தேவையை 40க்கும் மேற்பட்ட நாடுகள் மூலம் நிவர்த்தி செய்கிறது. வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து 60 சதவிதம் இறக்குமதி செய்யப்படுவதால், ஹார்முஸ் ஜலசந்தி மீதான சார்பு 40 சதவிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவையில் 50 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், அவசர காலத்தில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது, இவ்வாறு அவர் கூறினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஃபிளைதுபாய் கடத்தல் கவர் ஸ்டோரà ...

ஃபிளைதுபாய் கடத்தல் கவர் ஸ்டோரி ஃபிளைதுபாய் காக்பிட் தாக்குதலில் இஸ்ரேல்-அமெரிக்கா ஆக்ரோஷம்; வளைகுடா நாடுகள் ...

மக்கள் சேவையில் இருந்து ஒருபோதà ...

மக்கள் சேவையில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம்: பிரதமர் மோடி உறுதி நாட்டு மக்களின் சேவையே பாரதிய ஜனதா கட்சியின் உயிர்நாடியாக ...

ஜெம் வீரமணி வழக்கில் பாரபட்சமறà ...

ஜெம் வீரமணி வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை தேவை: வானதி சீனிவாசன் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் வீரமணி தொடர்பான போக்சோவழக்கில் எந்தவித ...

வெளிநாட்டு நிதி இந்திய சட்டங்கà ...

வெளிநாட்டு நிதி இந்திய சட்டங்களின் படி செலவிடப்பட வேண்டும் என்ஜிஓக்களின் (NGOs) எஃப்சிஆர்ஏ (FCRA) சான்றிதழ்களின் செல்லுபடியாகும் தன்மையைச்சரிபார்க்கவும், ...

இந்திய மண்ணில் முதன்முறையாகப் à ...

இந்திய மண்ணில் முதன்முறையாகப் பறந்த ஜப்பானிய போர் விமானங்கள்! இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு ...

கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர௠...

கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு (CSR): இது பணப் பிரச்சினையா அல்லது இடப் பிரச்சினையா? இந்தியாவில் இவ்வளவு அதிகமான கார்ப்பரேட் பணம் சமூகப்பொறுப்புணர்வு (CSR) ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...