சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக விளங்கும் மகளிர் சக்தி

* சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. 2026-ம் ஆண்டின் கருப்பொருள் “உரிமைகளும் நீதியும் – அனைத்து பெண்கள், சிறுமிகள் நலனுக்கான செயல்பாடு”.

* பாலின சமத்துவத்தை அடைவதில் முக்கியத்துவம் அளித்து இது கவனத்தை ஈர்க்கிறது.

* இந்தியாவின் வளர்ச்சி அணுகுமுறை பெண்களின் வளர்ச்சி என்பதிலிருந்து பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என மாறியுள்ளது.

* அரசியலமைப்புச் சட்டம் பெண்களுக்கு சம உரிமைகளையும் இந்தியாவின் ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்பையும் உறுதி செய்கிறது.

* கல்வி, சுகாதாரம், நிதி உள்ளடக்கம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் அரசு மேற்கொள்ளும் முயற்சிகள், பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான சூழல் அமைப்பை வலுப்படுத்துகின்றன.

* சுய உதவிக்குழுக்கள், தொழில்முனைவோர் திட்டங்கள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகியவை பெண்களின் பொருளாதார பங்கேற்பை விரிவுபடுத்துகின்றன.

கூட்டுக் குரல்களிலிருந்து உலகளாவிய அங்கீகாரம் வரை:

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினம், பெண்களின் உரிமைகள், சமத்துவத்தை நோக்கிய நீண்ட பயணத்தின் நினைவூட்டலாக நிற்கிறது.

தொழிலாளர் இயக்கங்கள், வாக்குரிமை இயக்கங்கள் முதல் உலகளாவிய உரிமைகள் வரை, பெண்களின் கூட்டு நடவடிக்கை சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

1977-ம் ஆண்டு ஐநா சபை சர்வதேச மகளிர் தினத்தை அங்கீகரித்தது.

இப்போது, உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. சமூக, பொருளாதார, அரசியல் துறைகளில் பெண்களின் சாதனைகளை இது அங்கீகரிக்கிறது. பெண்களின் உரிமைகள், பங்கேற்பு ஆகியவற்றுக்கான உலகளாவிய ஆதரவை வலுப்படுத்த ஒரு தளமாக இது செயல்படுகிறது.

இந்தியாவின் வளர்ச்சியில் மகளிர் சக்தி:

மகளிர் பங்கேற்பு இந்தியாவின் வளர்ச்சிக் கதையில் ஒரு அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, பெண்களின் முன்னேற்றம் என்பதில் இருந்து பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்பது வரை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பெண்களை பயனாளிகளாக மட்டுமல்லாமல், பொருளாதார, சமூக முன்னேற்றத்தின் இயக்கிகளாகவும் இந்தியா அங்கீகரித்துள்ளது.

இந்த மாற்றத்தை ஆதரிப்பது வளர்ந்து வரும் வாய்ப்புகளின் சூழல் அமைப்பாகும். கடன், சுய உதவிக்குழுக்கள், டிஜிட்டல் தளங்கள், கல்வி, பாதுகாப்பு வழிமுறைகள் ஆகியவை இந்தியாவின் வளர்ச்சியில் மகளிர் அதிக அளவில் பங்கேற்கவும், வழிநடத்தவும் உதவுகிறது.

சர்வதேச மகளிர் தினத்தன்று, முன்னேற்றத்தைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், இந்த ஆழமான மாற்றத்தை அங்கீகரிப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது.

2026-ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நாடு தழுவிய அளவில் கடைப்பிடிப்பதன் ஒரு பகுதியாக, புது தில்லியில் தொடர்ச்சியான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெண்களின் முன்னேற்றத்துக்கான முக்கிய அம்சங்கள் சில:

உரிமைகளை உறுதி செய்ய நாட்டில் தேசிய மகளிர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படும்போது பெண்களின் தலைமை வலுவடைகிறது. இந்தியாவில், பெண்கள், சிறுமிகளுக்கு கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவை கிடைப்பதை உறுதி செய்வதற்கும், பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான அடித்தளங்களை உருவாக்குவதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

* கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாக்கள் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு உறைவிட கல்வியை வழங்குகின்றன.

* செல்வமகள் சேமிப்புத் திட்டம் எதிர்கால முதலீடுகளைச் செய்ய குடும்பங்களை ஊக்குவிக்கிறது.

* பிரதமரின் தாய்மையை போற்றுவோம் திட்டத்தின் கீழ் , மகப்பேறு காலத்தில் வருமான ஆதரவை வழங்கும் வகையில், 4.26 கோடி பயனாளிகளுக்கு ₹20,060 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது.

* ஜல் ஜீவன் மிஷன் இயக்கத்தில் கிராமப்புறங்களில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் 16.72%-லிருந்து 81.57% ஆக அதிகரித்துள்ளது. இதனால் பெண்கள் தண்ணீர் தண்ணீர் எடுக்க செலவிடும் நேரமும், சிரமும் குறந்துள்ளது.

* 12 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டு, பெண்களுக்கான கண்ணியம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

* மக்களவை, மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டை வழங்கும் 106-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமான மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் – 2023 ஒரு வரலாற்று மைல்கல் ஆகும்.

* கோடிக்கணக்கான முஸ்லிம் பெண்களுக்கு கண்ணியம், சமத்துவம் உண்மையான அதிகாரமளிப்பை உறுதி செய்யும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தமாக முத்தலாக் ஒழிப்பு செயல்படுகிறது.

* தீன்தயாள் அந்த்யோதயா தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம், லட்சாதிபதி சகோதரிகள், நமோ ட்ரோன் தீதி திட்டம் போன்ற முயற்சிகள், கிராமப்புற பெண்கள் நிலையான வாழ்வாதாரத்தை அடைய உதவுகின்றன.

* பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தில் ₹32.61 லட்சம் கோடி மதிப்புள்ள 52 கோடி கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 68% பயனாளிகள் பெண்கள்.

* ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் பெண்களும் 56% பேர் பெண்கள்.

இந்த முயற்சிகள் அனைத்தும் சேர்ந்து, இந்தியாவின் வளர்ச்சி அணுகுமுறையில், பெண்களின் பங்கேற்பை அதிகரித்து நல்ல மாற்றத்தை பிரதிபலிக்கின்றன.

இந்தியா தனது வளர்ச்சிப் பயணத்தில் முன்னேறிச் செல்லும்போது, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்