தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு இம்மாதம் 8-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் அங்கு கூடியுள்ள பொதுமக்கள் இடையே அவர் உரையாற்றுகிறார். முன்னதாக சரோஜினி நகரில் கட்டப்படுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடுகளுக்கான சாவிகளை ஒப்படைக்கிறார்.

இதனையடுத்து 18,300 கோடி ரூபாய் மதிப்பிலான தில்லி மெட்ரோ திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், இரண்டு புதிய வழித்தடங்களையும் நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கிறார். இதில் மஜிலிஸ் பூங்கா – மெளஜ்பூர் – பாபர்பூர் இடையேயான 12.3 கி.மீ நீளமுள்ள இளஞ்சிவப்பு வழித்தடத்தையும் தீபாலிஜவுக் – மஜிலிஸ் பூங்காக இடையே 9.9 கி.மீ நீளமுள்ள மெஜந்தா நிற வழித்தடத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தப் புதிய வழித்தடங்கள் புராரி, ஜகத்பூர், வஜ்ஜிராபாத், கஜூரிகாஸ், பஜன்புரா, யமுனா விகார், மதுபன் சௌக், ஹைதர்பூர், பத்திலி, மூர், பலஸ்வா மற்றும் மஜ்ஜிலிஸ் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் பெரிதும் பயனளிப்பதாக அமையும்.

தில்லி மெட்ரோ ரயில் ஐந்தாம் கட்டப் பணிகளின் கீழ் 16.0 கி.மீ நீளமுள்ள 3 புதிய வழித்தடங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

பொதுக் குடியிருப்பு மற்றும் மறு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 15,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். இது சரோஜினி நகர், நேதாஜி நகர், கஸ்தூரிபாய் நகர் மற்றும் ஸ்ரீனிவாஸ்புரி போன்ற பல்வேறு முக்கியப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு சார்ந்த பகுதிகளை நவீனமயமாக்கும் திட்டங்களுக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களுக்கான உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்குமான மத்திய அரசின் லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...