அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்

“அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் – மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல்” என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணைய கருத்தரங்குகளின் நான்காவது பகுதியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

கல்வி, திறன், சுகாதாரம், சுற்றுலா, விளையாட்டு, கலாச்சாரம் ஆகிய துறைகள் இந்த இலக்குகளை அடைவதற்கான முதன்மையான அம்சங்கள் என்பதை எடுத்துரைத்த திரு மோடி, பட்ஜெட் அறிவிப்புகளை திறம்பட அமல்படுத்துவதற்கான கருத்துகளை தெரிவிக்குமாறு நிபுணர்களையும், கொள்கை வகுப்பாளர்களையும் வரவேற்றார். பொதுமக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல் என்பது வெறும் அம்சம் அல்ல என்று கூறிய அவர், அது இந்த பட்ஜெட்டின் முக்கிய நோக்கம் என்றும், இந்த அரசின் தீர்மானம் என்றும் தெரிவித்தார்.

நோய்த் தடுப்பு மற்றும் ஒட்டுமொத்த சுகாதார தொலைநோக்கு பார்வையை வலியுறுத்திய பிரதமர், சுகாதார உட்கட்டமைப்பு விரைவாக வலுப்படுத்தப்படுவதாகவும், யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் உலகளாவிய பிரபலம் குறித்தும் குறிப்பிட்டார். நூற்றுக்கணக்கான மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஆரோக்கிய மையங்கள் ஆகியவற்றின் மூலம் சுகாதார பராமரிப்பு சேவைகளுக்கான அணுகல் விரிவடைந்துள்ளதாக கூறினார். உலகளவில் பராமரிப்பாளர்களின் தேவை அதிகரித்து வருவதை குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், புதிய பயிற்சி தொகுப்புகளை வகுக்குமாறு நிபுணர்களை வலியுறுத்தினார். புதிய பயிற்சி தொகுப்புகளை வடிவமைத்தல் மற்றும் கூட்டாண்மைகள் குறித்து இந்த இணைய கருத்தரங்கில் கருத்துகளை தெரிவிக்குமாறு சுகாதரத் துறையைச் சேர்ந்த நிபுணர்களை தாம் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார். அதனால் நாட்டில் பயிற்சி முறை மேலும் வலிமைப் பெறக்கூடும் என்று திரு மோடி கூறினார்.

சுகாதார பராமரிப்பு துறையில் மின்னணு மாற்றங்கள் தொடர்பாக பேசிய பிரதமர், ஊரகப் பகுதிகளையும் சென்றடையும் தொலை மருத்துவத்தின் வெற்றி குறித்து குறிப்பிட்டார். இந்த வளர்ச்சியை குறிப்பிடும் வேளையில், பயனாளர்களின் அனுபவத்தை மேலும் எளிமைப்படுத்துதல் மற்றும் பொதுமக்களிடையே சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து பிரதமர் வலியுறுத்தினார். தொலை மருத்துவம் குறித்து இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்றும் அதன் பயன்பாட்டை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் திரு மோடி வலியுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...