மேற்காசியாவில் நிலவும் அசாதாரணமான நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் என்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 09) தொடங்கியது. அப்போது, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வளைகுடா நாடுகளில் நிலவும் அசாதாரண சூழல் குறித்தும், ஈரான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாடு மற்றும் கச்சா எண்ணெய் விலை விவகாரம் குறித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் மேற்காசிய போர் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது அவர், “ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து மேற்காசியாவில் நிலவும் அசாதாரணமான நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி உன்னிப்பாகக் கவனித்து வருகிறார். ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஜோர்டான், இஸ்ரேல், பஹ்ரைன் போன்ற நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
அந்த நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். பதற்றத்தை தணிக்க நாங்கள் அனைவரையும் வலியுறுத்துகிறோம். கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில் பல்லாயிரம் இந்தியர்கள் ஈரானில் படிப்பு மற்றும் வேலைக்காக சென்றவர்கள். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு வளைகுடா நாடுகள் மிகவும் முக்கியமானது.
மேலும், வளைகுடா நாடுகள் இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்காளியாக உள்ளன. இது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர் வர்த்தகத்தை ஈட்டுகிறது. உலகளாவிய கப்பல் துறையில் இந்தியர்கள் கணிசமான அளவில் பணியாற்றி வருகின்றனர். துரதிஷ்டவசமாக நாம் ஏற்கனவே இரண்டு இந்திய கப்பல் பணியாளர்களை இழந்துள்ளோம். ஒருவர் காணாமல் போகியுள்ளார்.
மேற்காசியாவில் நிலவி வரும் சூழல் நமக்கு கவலையளிக்கிறது. பிராந்தியத்தில் பதற்றங்களை தணிக்கப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக் காண நாங்கள் தொடர்ந்து வலியறுத்தி வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூடியது. அதில் பிராந்தியத்தில் நிலவும் சூழல் மற்றும் இந்தியர்கள் நிலைமை குறித்து விவாதித்தோம். சூழ்நிலைக்கு ஏற்ப தகுந்த நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகங்கள் மூலம் அவ்வப்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றிய போது எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |