எரிவாயு தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – பிரதமர் மோடி

மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

திருச்சி மாவட்டம் பஞ்சபூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 11) கலந்துகொண்டு உரையாற்றினார்.

கூட்டத்தில், திமுக ஆட்சியை விமர்சித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து மேற்காசிய போர் விவகாரம் குறித்தும் அதனால், நாட்டில் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் பிரதமர் பேசியதாவது:

”மேற்காசியாவில் நடக்கும் போரால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். இந்தப் போரானது சர்வதேச அளவில் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியையும் பாதித்துள்ளது. அத்தியாவசிய தேவை விநியோகத்திலும் இவை எதிரொலித்துள்ளன. எந்தவொரு சூழலிலும் இந்திய மக்களின் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும். வதந்திகளை நம்ப வேண்டாம். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே பகிர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கரோனா பெருந்தொற்று காலத்தில் நாம் எத்தகைய சிறந்த தேசம் என்பதை உலக நாடுகளுக்கு நிரூபித்தோம். அதேபோன்று இந்த சூழலையும் வெற்றிகரமாகக் கடந்து செல்வோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. வளர்ச்சி, நாணயமான உழைப்பை நோக்கி ஒரு பாதை அழைத்துச் செல்கிறது. மோசடி, போதைப் பொருள், ஏமாற்றத்தை நோக்கி மற்றொரு பாதை (திமுக) அழைத்துச் செல்கிறது.

மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. நாம் அனைவரும் இணைந்து வளமான தமிழகத்தை உருவாக்குவோம். நாம் அனைவரும் இணைந்து வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவோம். தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது. தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளது” என பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...