இந்தியா இடைத்தரகு செய்யும் நாடு அல்ல – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

பாகிஸ்தானை போல் இந்தியாவால் ‘இடைத்தரகர்’ நாடாக இருக்க முடியாது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஈரான் போரால் மேற்காசிய நாடுகளில் கச்சா எண்ணெய், எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால் உலகளாவிய வர்த்தகம் நாளுக்கு நாள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இந்தியாவிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மேற்காசிய நெருக்கடி தொடர்பாக டெல்லியில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் பங்கேற்று, சவாலான சூழ்நிலையை நமது நாடு எவ்வாறு சமாளித்து வருகிறது என்பது குறித்து விளக்கம் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசின் மீது வைக்கப்பட்டு வரும் பல்வேறு விமர்சனங்களுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்தார். அப்போது, ஈரான் போர் மற்றும் அயதுல்லா அலி காமேனியின் படுகொலை குறித்து இந்தியா பேசாமல் மௌனம் காப்பதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதிலளித்தார்.

“1981ஆம் ஆண்டில் இருந்தே அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. ஆனால், அப்போது இருந்தே பாகிஸ்தானின் முயற்சி தோல்வியை தான் சந்தித்து வருகிறது. நம் நாடு இடைத்தரகு செய்கிற நாடு அல்ல. மற்ற நாடுகளிடம் சென்று, “எங்களால் உங்களுக்கு பயன் இருக்கிறதா? என்று இந்தியா கேட்பதில்லை.

அதே சமயம், ஈரான் போர் விவகாரத்தில் இந்தியா மௌனம் காப்பதாக கூறுவது தவறு. நமது அரசு சார்பில் அவர்களிடம் பேசிக்கொண்டும், கருத்துகளை பரிமாறிக் கொண்டும் தான் இருக்கிறோம்” என்று கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...