“கேரளாவின் கடன் 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு” – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

கேரளா கடன் 10 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்ந்தது என பிரதமர் நரேந்திர மோடி பாலக்காட்டில் குற்றச்சாட்டு. “ஒருவர் ஊழல்வாதி என்றால், மற்றொருவர் மகா ஊழல்வாதி; ஒருவர் வகுப்புவாதி என்றால், மற்றொருவர் மகா வகுப்புவாதி” என்று அவர் விமர்சித்தார்.

கேரளா கடந்த பல தசாப்தங்களாக இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் கூட்டணி ஆகிய இரு சுயநல அரசியல்வாதிகளுக்கு இடையே சிக்கித் தவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
சட்டமன்றத் தேர்தலையொட்டி, கேரளாவின் பாலக்காட்டில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், வளைகுடா நாடுகளில் நிலவும் அசாதாரண சூழலை அரசியல் ஆதாயத்துக்கு காங்கிரஸ் பயன்படுத்துவதாக விமர்சித்தார்.

“ஒருவர் ஊழல்வாதி என்றால், மற்றொருவர் மகா ஊழல்வாதி; ஒருவர் வகுப்புவாதி என்றால், மற்றொருவர் மகா வகுப்புவாதி” என்று அவர் விமர்சித்தார். மேலும், கேரளாவின் கடன் கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து, தற்போது 5 லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் வெளிநாட்டில் வசிக்கும் சுமார் 1 கோடி இந்தியர்களின் உயிரைப் பணயம் வைத்து, காங்கிரஸ் கட்சி ஆபத்தான கருத்துக்களைக் கூறி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது. முன்னதாக, கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவியான ‘செண்டை மேளம்’ கொட்டி பிரதமர் மோடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், ரோட் ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...