குஜராத்தில் ரூ.3,300 கோடியில் செமி கண்டக்டர் ஆலை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத் அருகே உள்ள சனந்த் ஜிஐடிசி வளாகத்​தில், கெய்ன்ஸ் செமி​கான் நிறு​வனத்​தின் ரூ.3,300 கோடி மதிப்​பிலான செமி கண்​டக்​டர் உற்​பத்தி ஆலையை பிரதமர் நரேந்​திர மோடி நேற்று தொடங்கி வைத்​தார்.

இந்​திய செமி கண்​டக்​டர் திட்​டத்​தின் (ஐஎஸ்​எம்) கீழ் அங்​கீகரிக்​கப்​பட்ட திட்​டங்​களில், மைக்​ரான் டெக்​னாலஜி நிறு​வனத்​துக்கு அடுத்​த​படி​யாக வணி​கரீ​தியி​லான உற்​பத்​தி​யைத் தொடங்​கும் 2-வது பெரிய ஆலை இது​வாகும். இது, இந்​தி​யா​வின் உற்​பத்​தித் திறனை வலுப்​படுத்​து​வதோடு, சிப் உற்​பத்​தி​யில் நமது நாட்டை உலகள​வில் முக்​கிய மைய​மாக மாற்​று​வதற்​கான இலக்கை அடைவதை துரித​மாக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலை​தளத்​தில் கூறி​யுள்​ள​தாவது: கெய்ன்ஸ் செமி​கான் ஆலை திறப்​பு, தற்​சார்பு இந்​தியா நோக்​கிய நமது பயணத்தை மேலும் வலுப்​படுத்​தி​யுள்​ளது. இது நாட்​டில் வலு​வான செமி கண்​டக்​டர் உற்​பத்​திச் சூழலை உரு​வாக்​கு​வ​தில் ஒரு மைல்​கல்​லாகும். இந்த ஆலை​யில் உற்​பத்தி தொடங்​கப்​பட்​டுள்​ளது. இது இந்​தி​யா​வின் செமி கண்​டக்​டர் கட்​டமைப்பு எந்த வேகத்​தில் வளர்ந்து வரு​கிறது என்​ப​தற்​கான சான்​றாக அமைந்​துள்​ளது. இவ்​வாறு பிரதமர் தெரி​வித்​துள்​ளார்.

குஜ​ராத்​தில் ஆலை​யைத் தொடங்கி வைத்த பிறகு, அங்கு பணி​யாற்​றும் பொறி​யாளர்​கள் மற்​றும் தொழில்​நுட்ப வல்​லுநர்​களு​டன் பிரதமர் கலந்​துரை​யாடி​னார்.

தின​மும் 63 லட்​சம் யூனிட்: இந்த ஆலை​யில் முதற்​கட்​ட​மாக மேம்​படுத்​தப்​பட்ட ‘இன்​டெலிஜென்ட் பவர் மாட்​யூல்’ (ஐபிஎம்) உற்​பத்தி செய்​யப்​பட​வுள்​ளது. இவை வாக​னங்​கள் மற்​றும் தொழில்​துறை பயன்​பாடு​களுக்​குத் தேவை​யான முக்​கிய​மான பாகங்​களாகும். ஒவ்​வொரு மாட்​யூலிலும் 17 சிப்​கள் இருக்​கும். இவை கலி​போர்​னி​யா​வைச் சேர்ந்த ஆல்பா மற்​றும் ஒமேகா செமி கண்​டக்​டர் நிறு​வனத்​துக்கு விநி​யோகிக்​கப்பட உள்​ளன.

இந்த ஆலை​யின் அனைத்​துக் கட்​டப் பணி​களும் நிறைவடை​யும் போது, நாளொன்​றுக்கு 6.33 மில்​லியன், அதாவது சுமார் 63 லட்​சம் யூனிட்​களை உற்​பத்தி செய்​யும் திறன்​ கொண்​ட​தாக ​விளங்​கும்​.

ஜெயின் அருங்காட்சியகம்: ம​காவீர் ஜெயந்​தியை முன்​னிட்டு குஜ​ராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள கோபா தீர்த்​தத்​தில் சாம்​ராட் சம்​பிரதி அருங்​காட்​சி​யத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்​தார்.

அசோகரின் பேரனும் அகிம்சை மற்​றும் சமண மதத்​தைப் பரப்​புவ​தில் தன்னை அர்ப்​பணித்​துக் கொண்​ட​வரு​மான சாம்​ராட் சம்​பிர​தி​யின் பெய​ரால் அழைக்​கப்​படும் இந்த அருங்​காட்​சி​யகம், சமண மதத்​தின் வளமான வரலாறு, கலாச்​சா​ரம் மற்​றும் ஆன்​மிகப்பாரம்​பரி​யத்தை காட்​சிப்​படுத்​துகிறது.

விழா​வில் பிரதமர் மோடி பேசுகை​யில், “சுதந்​திரத்​துக்​குப் பிறகு, கையெழுத்​துப் பிர​தி​களைத் தேடிக் கண்​டறிவதும், அவற்​றைப் பாது​காப்​பதும் ஒரு தேசி​யப் பொறுப்​பாக இருந்​திருக்க வேண்​டும். ஆனால் துர​திருஷ்ட​வச​மாக, காலனித்​துவ மனப்​பான்​மை​யின் காரண​மாக, இதற்கு எவ்​வித கவன​மும் செலுத்​தப்​பட​வில்​லை. முன்பு இத்​தகையப் பணி​கள் அரசி​யல் கண்​ணோட்​டத்​துடனேயே மேற்கொள்ளப்பட்டு வந்தன. நாங்கள் அந்த மனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...