டெல்லியில் பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டம்: பிரதமர் மோடி ஆலோசனை

ஈ​ரான் – அமெரிக்க, இஸ்​ரேல் போரால் மேற்​காசி​யா​வில் பதற்​றம் தொடரும் நிலை​யில், பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று இரவு பாது​காப்​புக்​கான அமைச்​சரவை கவுன்​சில் (சிசிஎஸ்) ஆலோ​சனை நடத்​தி​யது. ஈரான் போரால் ஏற்​பட்​டுள்ள     நெருக்​கடியை சமாளிக்க எடுக்​கப்பட வேண்​டிய நடவடிக்​கைகள் குறித்து இந்​தக் கூட்​டத்​தில் விவா​திக்​கப்​பட்​டது.

அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து ஈரானுக்கு எதி​ராக கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி போரைத் தொடங்​கின. இந்​தப் போரில் ஈரான் நாட்​டின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உள்​ளிட்ட பல்​வேறு முக்​கிய தலை​வர்​கள் உயி​ரிழந்​தனர்.

இதையடுத்​து, ஈரான் கடும் பதிலடியை கொடுக்​கத் தொடங்​கியது. வளை​குடா நாடு​களில் அமைந்​துள்ள அமெரிக்க ராணுவ  தளங்​கள் மீது ஈரான் கடும் தாக்​குதலை நடத்​தி​யது. கடந்த ஒரு மாதத்​துக்​கும் மேலாக போர் தொடர்ந்து நடை​பெற்று வரு​கிறது. வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறி​வைத்து ஈரான் தாக்​குதல்​களை நடத்​து​வ​தால் கச்சா எண்​ணெய்யை மற்ற நாடு​களுக்கு அனுப்​புவ​தில் கடும் சிரமம் ஏற்​பட்​டுள்​ளது. மேலும், எண்​ணெய் கப்​பல்​கள் செல்​லும் ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் முற்​றி​லும் முடக்​கி​யுள்​ளது. இதனால், சர்​வ​தேச அளவில் எரிபொருள் தட்​டுப்​பாடு அதி​கரித்​துள்​ளது.

இந்​நிலை​யில், பாது​காப்​புக்​கான மத்​திய அமைச்​சர​வைக் குழு கூட்​டம் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று இரவு 7 மணிக்கு டெல்​லி​யில் நடை​பெற்​றது.

டெல்​லி​யில் பிரதமரின் அதி​காரப்​பூர்வ அலு​வல​கத்​தில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில், பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், வெளி​யுறவு அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

மேலும், பொருளா​தா​ரம் மற்​றும் உள்​கட்​டமைப்​புத் துறை​களைக் கையாளும் பல மூத்த அமைச்​சர்​களும் இந்த கூட்​டத்​தில் கலந்து கொண்​டனர். மேற்​காசி​யா​வில் தொடரும் போர், அதனால் இந்​தி​யா​வில் ஏற்​பட்​டுள்ள தாக்​கங்​கள், நாடு சந்​தித்து வரும்                பிரச்​சினை​கள், அதற்​கான தீர்​வு​கள் உள்​ளிட்​டவை குறித்து இந்​தக் கூட்​டத்​தில் அமைச்​சர்​களு​டன் பிரதமர் மோடி விரி​வான ஆலோ​சனை நடத்​தி​னார்.

மேலும், ஈரான் போரால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடியைச் சமாளிக்க எடுக்க வேண்​டிய உடனடி நடவடிக்​கைகள் குறித்து தீவிர​மாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. குறிப்​பாக நாட்​டில் எரிபொருள் மற்​றும் எல்​பிஜி, பிஎன்ஜி விநி​யோகத்​தின் தொடர்ச்​சியை மதிப்​பிட வேண்​டும் என்​றும், உணவு மற்​றும்

உரங்​களில் பதுக்​கல் மற்​றும் செயற்​கை​யான விலை உயர்​வு​களைத் தடுப்​ப​தற்​கான நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும் என்​றும் கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது.

அது​மட்​டுமல்​லாமல் வளை​குடா நாடு​களில் உள்ள இந்​தி​யர்​களை அங்​கிருந்து பாது​காப்​பாக வெளி​யேற்றி இந்​தி​யா​வுக்கு அழைத்து வரு​வதற்​கான சாத்​தி​யக்​கூறுகள் குறித்​தும் ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

இதே பிரச்​சினை தொடர்​பாக, இதற்கு முன்பு பாது​காப்​புக்​கான மத்​திய அமைச்​சர​வைக் குழு கூட்​டம் பிரதமர் மோடி தலை​மை​யில் கடந்த மார்ச் 22-ம் தேதி கூடி ஆலோ​சனை நடத்​தி​யது. இதில், மேற்​காசிய போரால் ஏற்​பட்​டுள்ள உலகளா​விய சூழல்          குறித்​தும், இந்​திய அரசின் தொடர்​புடைய அமைச்​சகங்​கள் மற்றும் துறைகள் இதுவரை எடுத்துள்ள தணிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சரவைச் செயலாளர் விரிவாக விளக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரவு 7 மணிக்கு தொடங்​கிய கூட்​டம் 9.15 மணிக்கு நிறைவடைந்​தது. மத்​திய பாது​காப்​புக்​கான அமைச்​சர​வைக் கவுன்​சில்               கூட்​டத்​தில் நடந்த ஆலோ​சனை தொடர்​பாக செய்​தி​யாளர்​களுக்கு மத்​திய வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​திர் ஜெய்​ஸ்​வால் விளக்​கி​னார். செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

மேற்​காசி​யா​வில் நடந்து வரும் போரின் காரண​மாக பல்​வேறு தாக்​கங்​கள் நிகழ்ந்து வரு​கின்​றன. இதை இந்​தியா ராஜதந்​திர      ரீதி​யாக அணுகி வரு​கிறது. இந்த விவ​காரத்​தில் ராஜதந்​திர ரீதி​யாக நாங்​கள் பரந்த சர்​வ​தேச சமூகத்​துடன் தொடர்ந்து தொடர்​பில் இருந்து வரு​கிறோம்.

மேற்​காசிய போர் தொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி, நெதர்​லாந்து பிரதமர் ராப் ஜெட்​டனைத் தொடர்பு கொண்டு பேசி​னார். அப்​போது, இரு​நாட்டு உறவு​களை மேலும் வலுப்​படுத்​து​வதற்​கான வழிகள் குறித்து 2 நாட்டு தலை​வர்​களும் நீண்ட                      ஆலோ​சனையை நடத்​தினர்.

அதே நேரத்​தில், மேற்கு ஆசி​யா​வின் நிலைமை குறித்​தும் அவர்​கள் கருத்​துக்​களைப் பரி​மாறிக் கொண்​டனர், மேலும்                        அப்​பகு​தி​யில் அமைதி மற்​றும் ஸ்திரத்​தன்​மையை விரை​வில் மீட்​டெடுக்க வேண்​டியதன் அவசி​யத்​தை​யும் 2 நாட்​டுத் தலை​வர்​களும் வலி​யுறுத்​தினர்.

மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர், போர்ச்​சுகல் நாட்​டின் வெளி​யுறவு அமைச்​சர் பாலோ ரங்​கலுடன் தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது, மேற்​காசி​யா​வில் நடந்து வரும் மோதல் குறித்து        கருத்​துக்​களைப் பரி​மாறிக் கொண்​டனர்.

இந்தியர்கள் பாதுகாப்பு: இது​வரை, ஈரான் தலைநகர் டெஹ்​ரானில் உள்ள நமது தூதரகம் 1,171 இந்​தி​யர்​களை தொடர்பு கொண்டு அவர்​கள் பாது​காப்​பாக இந்​தியா திரும்​புதவற்​கான ஏற்​பாடு​களைச் செய்​துள்​ளது.

இதில், 818 இந்​திய மாணவர்​கள் தரைவழி எல்லை வழி​யாக ஈரானை விட்டு ஆர்​மீனியா மற்​றும் அஜர்​பைஜான் வழி​யாக            வெளி​யேறு​வதும் அடங்​கும். இவ்​வாறு வெளி​யுறவுத் துறை செய்​தித் தொடர்​பாளர் ரந்​திர்​ ஜெய்​ஸ்​வால்​ தெரிவித்​தார்​.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.