மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி

மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்சி குழு தலைவர்களுக்கு இது குறித்து மோடி கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், 2029ல் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்று கூறியிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாகவும் முழுமையாகவும் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார். 2029ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் பெண்களுக்கு இடஒதுக்கீட்டுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு அமர்வுக்கு முன்னதாக, மோடி மக்களவை மற்றும் மாநிலங்களவையின் சபாநாயகர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார்.

‘நாரி சக்தி வந்தன் அதினியம்’ என்று அழைக்கப்படும் இந்த மகளிர் இடஒதுக்கீடு சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற அனைவரும் ஒரே மனதுடன் ஒன்றிணைய வேண்டும் என்று அதில் வலியுறுத்தினார். ஏப்ரல் 11 அன்று எழுதிய தனது கடிதத்தில், “விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, நாரி சக்தி வந்தன் அதினியம் சட்டத்தை நாடு முழுவதும் அதன் உண்மையான உணர்வுடன் செயல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். 2029ஆம் ஆண்டில் நடைபெறும் மக்களவைத் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள், பெண்களுக்கு இடஒதுக்கீட்டுடன் நடத்தப்படுவது மிக அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டு, ஏப்ரல் 16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடத்தப்படுகிறது. மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்தால், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 816 ஆக உயர்ந்து, அவற்றில் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கும் இந்தச் சட்டம், 2023ஆம் ஆண்டில் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...