தவெக குதிரை பேரத்தால் இரு தொகுதிகளில் இடைத்தேர்தல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தவெகவில் நடைபெற்றதாகக் கூறப்படும் குதிரை பேரம் மற்றும் அதற்காக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பணப் பரிவர்த்தனைகளின் காரணமாகவே இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சட்டசபையில் தொடர்ந்து மாமா, அக்கா போன்ற வார்த்தைகளை மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருப்பதைத் தவிர, வேறு என்ன சாதித்துள்ளனர் என்று கேள்வி எழுப்பிய அவர், தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான தேவையும் என்னஎன்றும் கேள்வி எழுப்பினார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான சூழல் குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், இரு தொகுதிகளிலும் முன்பு அதிமுக சார்பில் போட்டியிட்ட அதே வேட்பாளர்களே தற்போது தவெக சார்பில் போட்டியிடுவதாகக் குறிப்பிட்டார். முதலில் அதிமுக வேட்பாளர்களாக களமிறங்கியவர்கள் தற்போது தவெக வேட்பாளர்களாக நிற்பதன்பின்னணி என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். குதிரை பேரம் நடைபெற்றதாலும், பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை வாங்கியதாலும் இருவரும் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
ஆட்சிக்கு வந்தவுடன் ரூ.2,500 வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார். பல பகுதிகளில் மின்வெட்டு நிலவுவதாகவும், தமிழக சட்டசபைக்கு நீண்ட பாரம்பரியம் இருந்தபோதிலும் அங்கு தற்போது மோசமான சூழல் நிலவுவதாகவும் அவர் கூறினார்.
அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், மின்சாரத்திற்கும் பாலுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், கஞ்சா விற்பனைக்கு மட்டும் தட்டுப்பாடு இல்லை என விமர்சித்த நயினார் நாகேந்திரன், நெல்லையில் கூட 15 மூட்டை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |