நவீன உள்கட்டமைப்பு வளர்ச்சியை பிரதிபலிக்கும் புதிய இந்தியா: நிதின் நபின்
பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையை நினைவுகூரும் நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள உள்கட்டமைப்பு மாற்றங்கள், வளர்ந்துவரும் புதிய இந்தியாவின் முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது:
டில்லியில் இருந்து மீரட்டுக்கு சாலை வழியாக பயணம் மேற்கொண்டபோது, தொலைநோக்குப்பார்வையுடன் உருவாக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நேரடியாகக் காண முடிந்ததாக நிதின் நபின் குறிப்பிட்டுள்ளார்.
முன்பு டில்லி-மீரட் இடையேயான சாலைப்பயணத்திற்கு மூன்று மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் தேவைப்பட்ட நிலையில், தற்போது அந்தப் பயணத்தை சுமார் 45 நிமிடங்களில் மேற்கொள்ள முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.
டில்லி-மீரட் விரைவுச்சாலை தற்போது லட்சக்கணக்கான மக்களின் அன்றாடப்பயணத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பீஹார் மாநில சாலை கட்டுமானத் துறை அமைச்சராக பணியாற்றிய தனது அனுபவத்தை குறிப்பிட்ட நிதின் நபின், தரமான சாலை என்பது வெறும் இரு நகரங்கள் அல்லது பகுதிகளை இணைக்கும் கட்டமைப்பு மட்டும் அல்ல என தெரிவித்துள்ளார். சாலைகள் மூலம் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்லவும், மாணவர்கள் கல்வி நிறுவனங்களை எளிதாக சென்றடையவும், நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவமனைகளை அடையவும் முடிகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச் சேவையை கொண்டாடும் இந்த நேரத்தில், நாட்டில் நடைபெற்று வரும் இத்தகைய மாற்றங்கள் இந்தியாவின் வளர்ச்சிப்பாதையை வெளிப்படுத்துவதாகவும் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
உலகத் தரத்திலான போக்குவரத்து வசதிகளை உருவாக்க வேண்டும் என்ற நீண்டகால கனவுகள் தற்போது நடைமுறைக்கு வந்து கொண்டிருப்பதாகவும், நவீன உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிப்பயணத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் கூறியுள்ளார்.
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |