அம்பிகையின் வருகை – யானை மீது; புறப்பாடு – சேவல் மீது (அக்டோபர் 11 முதல் அக்டோபர் 20 வரை)
மகா அஷ்டமி: அக்டோபர் 19 (திங்கட்கிழமை),
மகா நவமி: அக்டோபர் 20 (செவ்வாய்க்கிழமை),
விஜயதசமி: அக்டோபர் 21 (புதன்கிழமை)
அன்னை துர்க்கை வழிபாட்டின் மகா திருவிழாவான சாரதா நவராத்திரி அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை வரை நடைபெறுகிறது. அஸ்வினி மாத சுக்ல பக்ஷ அஷ்டமி திதி அக்டோபர் 19 திங்கட்கிழமையும், நவமி திதி அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமையும் வரும். அக்டோபர் 21 புதன்கிழமை அன்று விஜயதசமி கொண்டாடப்படும். துர்கா சப்தசதியின்படி நவராத்திரியில் அன்னையை ஆழ்ந்த பக்தி மற்றும் நம்பிக்கையுடன் வழிபட்டால் வாழ்வில் இன்பமும் நற்பேறும் பெருகி வளம் கூடும். சரத் காலத்தில் துர்க்கையை மகா பூஜை செய்து வழிபடுவது அனைத்துத் தடைகளையும் நீக்கும். இந்நாட்களில் சக்தி வடிவங்களான துர்க்கை, காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை வழிபடுவது அளப்பரிய பலன்களைத் தரும்.
இந்த ஆண்டு அம்பிகை யானை மீது எழுந்தருளி வருகிறாள்; சேவல் மீது புறப்படுகிறாள். இதனால் உலகிற்கு நன்மைகளும் அமைதியும் உண்டாகும். நவராத்திரியின் ஒன்பது வடிவங்கள்: முதல் நாள் – சைலபுத்ரி, இரண்டாம் நாள் – பிரம்மச்சாரிணி, மூன்றாம் நாள் – சந்திரகாண்டா, நான்காம் நாள் – கூஷ்மாண்டா, ஐந்தாம் நாள் – ஸ்கந்தமாதா, ஆறாம் நாள் – காத்யாயனி, ஏழாம் நாள் – காளராத்திரி, எட்டாம் நாள் – மகாகௌரி, ஒன்பதாம் நாள் – சித்திதாத்ரி. அம்பிகையின் அருளைப் பெற நல்ல நேரத்தில் கலச ஸ்தாபனம் செய்து, விரதம் மேற்கொண்டு ஸ்ரீ துர்கா சப்தசதி பாராயணமும் மந்திர ஜெபமும் செய்வது அளவற்ற நன்மைகளைத் தரும்.
துர்கா சப்தசதியை ஒரு முறை பாராயணம் செய்தால் பலன் சித்திக்கும்; 3 முறை பாராயணம் செய்தால் இன்னல்கள் தீரும்; 5 முறை பாராயணம் செய்தால் சர்வ அமைதி கிட்டும்; 7 முறை செய்தால் அச்சம் நீங்கும்; 9 முறை செய்தால் யாகம் செய்த பலன் கிடைக்கும்; 11 முறை செய்தால் அரசாங்க மேன்மை உண்டாகும்; 12 முறை செய்தால் காரிய சித்தி கிட்டும்; 14 முறை செய்தால் வசியமாகும்; 15 முறை செய்தால் செல்வம் பெருகும்; 16 முறை செய்தால் புத்திர பாக்கியமும் தனமும் சேரும்; 17 முறை செய்தால் எதிரிகள், பிணிகள், அரசாங்க பயம் விலகும்; 18 முறை செய்தால் விருப்பமானவை கிடைக்கும்; 20 முறை செய்தால் கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்; 25 முறை பாராயணம் செய்தால் அனைத்துக் கட்டுகளிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |