அண்ணாமலை அவர்களின் கேள்விகள், அமைதியான போராட்டத்திற்கும், திட்டமிட்ட ரீதியில் சட்டத்தை மீறிய போராட்டத்திற்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவுபடுத்தவில்லை.
டெல்லியில் CJP தலைவர்களுக்கு ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்த தெளிவான காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு எதிர்வினையாற்றும் விதமாக சட்ட விரோத நுழைவுகளை தடுக்க அமைக்கப்பட்ட தடுப்புகளைத் அராஜகமாக தாண்டி ஏறி குதித்து அனுமதி மறுக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்த செயலும், அதற்கு முன்னர் அவர்களே கையெழுத்திட்டிருந்த அமைதிப் பத்திரங்களை மீறிய நடவடிக்கையாகும். சிறப்பு நிர்வாக நீதிபதியின் நீதிமன்றக் காவல் உத்தரவுகளும், அதைத் தொடர்ந்த நீதிமன்றக் காவலும் “சட்டத்திற்கு மரியாதை இல்லை” என்ற கலகக்காரர்களின் அனுமதியில்லாத தொடர் போராட்டங்கள், மற்றும் உறுதி மொழி மீறல்கள் ஆகியவைகளையே துல்லியமாகக் குறிப்பிடுகின்றன என்றாலும் உயர் நீதிமன்றம் அவற்றை மறுஆய்வு செய்து விடுவித்தது. அது தான் சட்ட விதி முறை.
நரேந்திர மோடிஅவரகள் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான அமைதியான தர்ணா போராட்டத்தின் மீது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி காலத்தில் நடத்தப்பட்ட அடக்குமுறையை விமர்சித்தார். அந்தச் சூழல், அக்டோபர் 2026 CJP நிகழ்வுகளிலிருந்து வேறுபட்டது. ஜந்தர் மந்திரில் கூடுவதற்கு குறுகிய கால அறிவிப்பு, முந்தைய நடத்தை, பாதுகாப்பு/போக்குவரத்துக் கவலைகள், உச்ச நீதிமன்ற குறிப்பு ஆகிய காரணங்களால் CJP யினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர், அந்த இடத்தில் அனுமதி மறுக்கப்பட்ட பிறகு CJP யினர் வாயில்கள்/தடுப்புகளைத் தாண்டி உள்ளே நுழைந்து, கொடிகளை ஏற்றி, அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதால், அத்துமீறல், பிணை விதிகள் மீறல் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இடையூறு விளைவித்தல் ஆகியவற்றுக்காக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. முன்னதாக, அக்டோபர் 10 அன்று மேற்கொள்ளப்பட்ட கைதுகள் பெரும்பாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாகவே இருந்த நிலையில் பல சாதாரண போராட்டக்காரர்கள் விரைவாக விடுவிக்கப்பட்டனர். அமைதியைப் பேணுவதற்காக, தலைவர்கள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டங்கள் நடைபெற மாற்று இடங்கள் குறித்து அக்டோபர், 9 அன்று உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை தொடர்ந்து உள்துறை அமைச்சகத்தின் குழு ஒன்று ‘ஜந்தர் மந்தர்’ இடத்திற்கு மாற்றாக சிறந்த வசதிகள் கொண்ட இடங்களை தேர்வு செய்து அறிவித்திருந்த நிலையில், அனுமதியில்லாத இடத்தில் “போராட்டத்திற்கான இடத்தை தடை செய்ததாக” வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதோடு அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்த CJP தயாராயில்லை என்ற உண்மையை மூடி மறைக்கின்றன.
நீட் போராட்டங்களில் இருந்து எழுந்த பெல்லட் துப்பாக்கிச் சூடு குற்றச்சாட்டுகள், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரி விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. காவல்துறையும், மத்திய சேமக் காவல் படையும் (CRPF) இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், “நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று சொல்வது முறையல்ல என்பதோடு பெல்லட் குண்டுகள் சுடப்பட்டன என்று மற்றவர்கள் ‘தீர்ப்பு’ சொல்வது பொறுப்பான செயல் அல்ல.
ஒரு பாஜக எம்.எல்.ஏ தலைமையிலான ராம்லீலா குழுவினரால் ‘கரப்பான் பூச்சி’ உருவ பொம்மை கொளுத்தப்பட்டது என்பது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தொடர் நிகழ்வு என சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் அரசியலுக்காக CJP யை தான் அது குறிக்கிறது என்று சொல்வது தற்செயலாக கவனத்தை ஈர்த்ததாக தான் கருதப்படும். ஒரு வேளை, அப்படியே நடந்திருந்தாலும், அனுமதியற்ற இடத்தில் CJP யினர் அத்துமீறியதும், பிணை விதிகளை மீறியதையும் நியாயப்படுத்த முடியாது.
அண்ணாமலை அவர்கள் ஜூன் 2026-ல் பாஜகவிலிருந்து விலகினார். யாரையும் விமர்சிப்பதற்கு அவருக்கு முழு சுதந்திரம் உண்டு. அனுமதிக்கப்பட்ட இடத்தில் அத்துமீறல், நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளை மீறியது மற்றும் தடைசெய்யப்பட்ட இடத்தில் வன்முறை போன்ற தொடர் நிகழ்வுகளை அவர் விமர்சிக்காமல் தவிர்க்கும்போது, அவரது விமர்சனம் வலுவிழந்துவிடுகிறது. போராட்டங்களை மேற்கொள்வது ஜனநாயக உரிமை என்றாலும், நீதிமன்ற நிபந்தனைகளை மீறுவதும், சட்டத்தை அவமதிப்பதும், அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் காவல் துறையின் தடுப்புகளை அராஜகமான முறையில் தகர்ப்பதும், மீறுவதும் ஜனநாயகத்தை அவமதிக்கும் செயலேயாகும். தங்களைச் சீர்திருத்தவாதிகள் எனக் காட்டிக்கொள்பவர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் சட்டத்தின் ஆட்சி பொருந்தும்.
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,,
பாஜக, தமிழ்நாடு
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |