தலைவனுக்கும் தொண்டனுக்கும் சமத்துவம் நிலவும் இடம் ஆன்மிகம்தான்! விநாயகர் முழு முதற் கடவுள்; அனுமார் தொண் டர். முதலில் விநாயகர் திருவிழாவுடன் தொடங்கி, ஆஞ்சநேயர் விழாவுடன் நிறைவு செய்வது ஒரு மரபு. ஆதலால் கணபதியை ஆதிமூர்த்தியாகவும், அனுமனை அந்தமூர்த்தியாகவும் கொண்டனர்.
இரு வரும் சரிபாதியாக இணைந்த கோலத்தில் உருவான மூர்த்தமே ஆத்யந்தமூர்த்தம். ஒருபுறம் யானை முகமும், மறுபுறம் அனுமன் முகமும் கொண்டு காட்சியளிக்கிறார்.
அனுமன், கணபதி இருவரும் விலங்கு முகம் உடையவர்கள். இருவரும் பிரம்மசாரிகள். பிள்ளை யார் சுழியுடன் எழுதத் தொடங்குகிறோம். இலக்கணப் புலமை பெற்ற அனுமார், நல்ல பேச்சாற்றலை அருளுபவர். இருவரும் உடல் நலத்தை அருளுபவர்கள். கணபதியை வணங்கினால் மேனி நுடங்காது என்பது ஒளவையார் வாக்கு. அனுமனைப் பணிந்தால், நோயில்லாமல் வாழலாம்.
இருவரும் எளிய வழிபாடுகளால் மகிழ்பவர்கள். விநாயகர், இடையூறுகளை நீக்கிக் காப்பவர். அனுமன் செயல்களை வெற்றியுடன் நிறைவேற்றிக் கொடுப்பவர்.
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.