விநாயகர் சதுர்த்தித் திருவிழா இந்துக்களின் எழுச்சி, ஒற்றுமைக்கான திருவிழா;

 விநாயகர் சதுர்த்தித் திருவிழா  இந்துக்களின்  எழுச்சி, ஒற்றுமைக்கான  திருவிழா கடந்த 30 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தித் திரு விழாவினை இந்துக்களின் எழுச்சி, ஒற்றுமைக்கான திருவிழாவாக சமுதாய விழாவாக இந்துமுன்னணி நடத்தி வருகிறது. சமுகத்தில் ஏற்பட்டுள்ள ஜாதி, மொழி, அரசியல் உளிட்ட பல் வேறு பெயர்களில் ஏற்பட்டுள்ள பிரிவுகளைக்களைந்து இந்து_சமுதாயத்தை ஒன்றிணைக்க வேண்டும் எனும் எண்ணத்தில் இந்தவிழா தமிழகம் முழுவதும் மிகசீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் ஒவ்வொரு பேட்டையிலும் விநாயகர்_திருமேனி வைத்து கூட்டாக வழிபாடுநடத்தி முடித்து, ஒன்றாக இணைந்து விசர்ஜன ஊர்வலத்தில் குடும்பததோடு கலந்து கொள்வதன்மூலம் சமுதாய ஏற்றத் தாழ்வு சரி செய்யப்படுகிறது. இதில் தீண்டாமை ஒழிப்பு முக்கியத்துவம்பெறுகிறது.

விநாயகர் சதுர்த்திப் பெரு விழாவிற்குப் பொது மக்களிடையே அதிக உற்சாகமும், உத்வேகமும் ஏற்பட்டுள்ளது. தமிழகமெங்கும் சுமார் 15000க்கும் அதிகமான இடங்களில் இவ் விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு விநாயகர்சதுர்த்தி விழாவின் மையக்கருத்தாக எல்லோரும் சமமாக_கோயில்களில் சுவாமியை வழிபட வேண்டும். இதற்காக கோவில்களில் வசூலிக்கப்படும் தரிசனக்கட்டணத்தை அரசு ரத்துசெய்ய வேண்டும் என்பது வலியுறுத்தப்படும்.

சென்னையில் விசர்ஜன ஊர்வலமானது வரும் 23-9-2012 ஞாயிறு மதியம் தொடங்கி பட்டினப் பாக்கம் சீனிவாச புரம் கடற்கரையில் இந்துஎழுச்சி விழாவாக நிறைவுபெறும். இதற்கான ஏற்பாடுகளை வட்டம், தொகுதி, மாவட்டம், மாநகரம் முதலான அனைத்து பொறுப்பாளர்களும் செவ்வனேசெய்து வருகிறார்கள். விசர்ஜன ஊர்வலத்திலும் நிறைவு_நிகழ்ச்சியிலும் பொது மக்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ள இந்து முன்னணி அழைப்புவிடுக்கிறது.

இந்த விழா தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெறவும், விசர்ஜன ஊர்வலம் நல்ல முறையில் நடை பெறவும் காவல் துறையும், தமிழக அரசும், தமிழக அரசு அதிகாரிகளும் தகுந்தஏற்பாடுகளை செய்து ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறோம் என் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் கருத்து தெரிவித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...