திரு.ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பாஜகவுடன் சேர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக முடிவெடுத்துள்ளது. மேலும் பெருமளவில் அரசியல் தலைவர்களும், மரியாதைக்குரிய பிரஜைகளும், அரசியல் இயக்கங்களும் பாஜகவில் இணைந்தோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்துக்கொண்டோ தங்கள் ஆதரவுக்கரங்களை நீட்டி வருகின்றனர். இவை பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நரேந்திர மோதிக்கு பெருகிவரும் ஆதரவை தெளிவாக காட்டுகிறது.
தங்களை தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக குறிப்பிட்டுக்கொள்ளும் சில அரசியல் இயக்கங்கள், அந்த அந்த குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும் செல்வாக்குடையதாக இருக்கலாம். ஆனாலும், அவர்கள் இணைவது பெரிய அரசியல் சமிக்ஞை ஆகும். பாஜக நரேந்திர மோதியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவுடன், சில ஊடகத்துறை நண்பர்களிடமிருந்தும் அரசியல் நோக்கர்களிடமிருந்தும் எழுந்த முதல் கருத்து, இனி பாஜகவுடன் கட்சிகள் கூட்டணி சேர்வது கடினம் என்பதுதான். அந்த கட்சி தனிமைப்படுத்தப்பட்டு விடும் என கருதினார். இப்படி பெருகிவரும் ஆதரவு கிடைக்குமானால் இந்த 'அற்புதமான தனிமை'யை அனுபவிக்க கட்சி தயாராகவே இருக்கிறது. ஆனாலும், அத்தகைய நிலை ஏற்படப்போவதில்லை.
பலவீனமான பா.ஜ.க.,வை விட பலமுள்ள பாஜகவிற்கு, தோழர்களையும் கூட்டணிகளையும் ஈர்க்கும் சக்தி அதிகம். பாஜக கூட்டங்களுக்கு பெருகிவரும் ஆதரவு மாற்றத்திற்கான அறிகுறி என்பது தெளிவு. காற்று எந்தப்பக்கம் வீசும் என்பதை இது உரக்க, தெளிவாக சொல்கிறது. குஜராத், கர்நாடக மாநிலங்களில். பாஜகவை விட்டு விலகியவர்கள் மீண்டும் இணைந்திருப்பது கட்சிக்கு கூடுதல் பலம். பஞ்சாப், ஹர்யானா, மகாராஷ்ட்ரா, பிஹார் மற்றும் தமிழகத்தில் நமக்கு குறிப்பிடத்தக்க கூட்டணி அமைந்துள்ளது. இன்னும் பிற மாநிலங்களில் தேர்தலுக்கு முன் தேர்தல் உடன்பாடும், தேர்தலுக்குப்பின் அரசியல் உடன்பாடும் ஏற்பட வாய்ப்பும் நிச்சயம் உள்ளது.
பலமுள்ள பாஜக.,வால் தான் பலமான தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்த முடியும் என எப்போதும் நம்புபவன் நான். தேசிய ஜனநாயக கூட்டணியை எப்படி பலப்படுத்துவது என்பதை அடல்ஜியிடமிருந்து பாடம் கற்க வேண்டும். 1996ல் மூன்று கட்சிகள் கூட்டணியாக இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி, 1998ல் 24 கட்சிகள் கூட்டணியாயிற்று. பிரதேசக்கட்சிகளை ஈர்க்க வேண்டுமானால், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை எனும் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்ற வேண்டும். பிரபலமாகும் ஆதரவு, அதிகரிக்கும் கூட்டணிகள் மற்றும் விரிந்து வரும் கூட்டணியின் சமூக நடத்தை ஆகியவற்றின் விளைவுகள் தான், இன்றைய நிலையில் குறிப்பிட வேண்டியது அம்சம். இவையெல்லாம் புதிய மாற்றத்திற்கான அறிகுறி.
நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.