மோடி பிரதமர் ஆனால நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்வார்

 நாட்டில் மாற்றம் கொண்டு வர பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு வாக்களியுங்கள் என்று பாஜக மூத்த தலைவர் எல் கே. அத்வானி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அத்வானியின் பேச்சு கட்சி வட்டாரத்தினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் ஷேவ்காவ்னில் போட்டியிடும் பாஜக எம்.பி. தினேஷ் காந்திக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல்பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:

மோடிக்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்துங்கள். நாட்டுக்கு தற்போதுதேவை, செயல் துடிப்புடன் நடவடிக்கை எடுப்பவர்தானே தவிர, வாய்ச் சொல் வீரர் தேவையில்லை. எனவே மாற்றம் கொண்டுவர மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

முன்பு, வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த போது இந்தியா கடும்நெருக்கடியில் சிக்கியிருந்தது. பொக்ரானில் அணு குண்டு சோதனை நடத்தியதன் மூலம் பொருளாதார தடைகளை சந்திக்கவேண்டி வந்தது. அதுமட்டுமல்ல குஜராத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்ட போது அதை மிகுந்த சிரமத்துக்கு இடையே சமாளிக்க வேண்டியிருந்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருந்தது. பண வீக்கம் எந்த சூழ்நிலையிலும் அதிகரிக்கவில்லை. நாடுமுழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளும், கிராமப்புற சாலைகளும் அமைக்கப்பட்டன. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் இருந்தது.

வாஜ்பாய் அரசு, இன்னும் சில காலம் நீடித்திருந்தால் புரட்சிகர திட்டமான நதிகள் இணைப்பு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டிருக்கும். எந்தவொரு மாநிலமும் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லாமல் வறட்சியை சந்திக்க நேர்ந்திருக்காது.

இதேபோல், குஜராத்தில் முதலமைச்சராகப் பதவியேற்ற மோடி, நர்மதை அணை திட்டத்தை செயல்படுத்தியது, குஜராத்தை தொழில்கள்நிறைந்த மாநிலமாக உருவாக்கியது, விவசாயிகள் நிலங்களை சாகுபடி செய்வதற்கான தண்ணீரை வழங்கியது, தடையில்லா மின்சாரம், கல்விவளர்ச்சி, பொது விநியோக முறையை சீராக செயல் படுத்தியது, சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டியது என்று பல்வேறு வகைகளிலும் குஜராத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளார்.

அவர், நாட்டுக்கு பிரதமராகவந்தால் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்வார் என்பது உறுதி என்றார் அத்வானி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.