லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க 15 இடங்களிலும் தி.மு.க அணி 14 தொகுதிகளிலும் பா.ஜ.க அணி 10 தொகுதிகளிலும் வெல்லும்வாய்ப்பு இருக்கிறது என்று ஜூனியர் விகடன் வாரம் இரு முறை இதழ் தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளின் களநிலவரத்தை ஜூனியர் விகடன் வாரம் இரு முறை இதழ் பலகட்டமாக வெளியிட்டு வந்தது. அதில், நரேந்திர மோடிக்கு தமிழகத்தில் பெருமளவில், அதாவது 51சதவீதம் ஆதரவு இருப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் இப்போது வெளியிட்டுள்ள இறுதி கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 10 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளது. 40 தொகுதிகளில் ஒவ்வொரு கட்சியும் கைப்பற்ற வாய்ப்புள்ள தொகுதிகளாக ஜூனியர் விகடன் பட்டியலிட்டுள்ளவை விவரம்:
மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, நாகப்பட்டிணம், கள்ளக் குறிச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், சேலம், திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், திருநெல்வேலி ஆகிய 12 தொகுதிகளில் திமுக வெல்லும் வாய்ப்பிருக்கிறதாம்.
லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடும் அ.தி.மு.க.,வுக்கு 15 தொகுதிகள் கிடைக்கலாம் என்கிறது ஜூ.வி. திருவள்ளூர், வட சென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, .திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய தொகுதிகளில் திமுக வெல்லும் வாய்ப்பிருக்கிறதாம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமைவகிக்கும் பாஜக தமிழகத்தில் 4 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது என்றும் . வேலூர், கோவை, பொள்ளாச்சி மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் பாஜக வசமாகலாமாம். இதில் வேலூரில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான புதிய நீதிக் கட்சி தாமரை சின்னத்திலும் பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தாமரை சின்னத்திலும் போட்டியிடுகிறது.
பாஜக அணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள்கட்சி தருமபுரி, அரக்கோணம், ஆரணி உள்ளிட்ட தொகுதிகளில் வெல்லக் கூடும் என்றும். அதேபோல் பாஜகவின் மற்றொரு கூட்டணி கட்சியான ம.தி.மு.க.,வுக்கு இம்முறை 3 இடங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளதாம், ஈரோடு, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளை மதிமுக கைப்பற்றுமாம்.
மொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 10ஐ கைப்பற்றலாம் என்கிறது ஜூ.வி.யின் கள நிலவரரிப்போர்ட்.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.