தற்போது, நாட்டை வலுப்படுத்துவது எப்படி என்பதே முக்கியபிரச்னை

 கடந்த 60 ஆண்டுகளாக சோனியா குடும்பம்தான் வலுவடைந்துள்ளது, தற்போது, நாட்டை வலுப்படுத்துவது எப்படி என்பதே முக்கியபிரச்னை. உங்களை வலுப்படுத்திகொள்ள நீங்கள் விரும்பும் போது, பாஜக., நாட்டை வலுப்படுத்த விரும்புகிறது. என்று பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா , தனது கணவர் ராபர்ட்வத்ராவை அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே குறிவைத்து அரசியல்கட்சிகள் விமர்சித்து வருவதாகவும்,இது தனக்கு வருத்தமளிப்பதாகவும் . இந்த குற்றச்சாட்டுகள் தன்னை மேலும் வலுவடைய செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசியதாவது , ராபர்ட்வத்ரா மீதான குற்றச்சாட்டுக்கள் தாங்கள் வலுவடைய செய்துவருவதாக பிரியங்கா கூறியுள்ளார். கடந்த 60 வருடங்களாக சோனியாகுடும்பம் மட்டுமே வலுவடைந்துள்ளது. தற்போது, நாட்டை வலுப்படுத்துவது எப்படி என்பதே முக்கியபிரச்னை. உங்களை வலுப்படுத்திகொள்ள நீங்கள் விரும்பும் போது, பாஜக., நாட்டை வலுப்படுத்த விரும்புகிறது. மக்களின் குரலைதவிர வேறு எதுவும் எங்களுக்கு உயர்ந்தது இல்லை.

உண்மையான விவகாரங்களில் இருந்து மக்களை காங்கிரஸ் திசை திருப்புகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாங்கள் குரல் எழுப்பும் போது, என் மீது அதிகப்படியான குற்றச் சாட்டுகளை அக்கட்சி கூறிவருகிறது. இது நிருபிக்க தவறும்போது, சிபிஐ., அமைப்பை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தவறாக பயன் படுத்தி வருகின்றனர். உண்மையான விவகாரங்களை மையப்படுத்தி போட்டியிடும் தன்மையை காங்கிரஸ்கட்சி இழந்துவிட்டது என நான் நினைக்கிறேன். தாயும்மகனும் சேர்ந்து நாட்டை கொள்ளையடித்து வருகின்றனர். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புபணத்தை திருப்பி கொண்டு வர வேண்டாமா? என கேள்வி எழுப்பிய மோடி, நேற்று, கறுப்பு பணத்தை நாட்டிற்கு திருப்பிகொண்டு வர, சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்காததற்காக மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மக்களிடம் இருந்து பலதகவல்களை மறைக்கிறது என கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...