சிறப்பாக செயல்படும் எம்.பி.க்களுக்கு மத்திய மந்திரி பதவி

 மத்திய பா.ஜ.க அரசு நேர்மையான சிறந்த நிர்வாகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது . இதன் ஒரு அம்சமாகவே மத்திய மந்திரிகளுக்கும், பா.ஜ.க எம்.பி.க்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பா.ஜ.க.,வில் 150–க்கும் அதிகமான எம்.பி.,க்கள் புதுமுகங்கள். இவர்களுக்கு பயிற்சிவகுப்புகள் நடத்தப்பட்டு எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கப்பட்டது.

பாராளுமன்றம் மற்றும் டெல்லி மேல்சபை என மொத்தம் 320 பேர் பா.ஜ.க எம்.பி.க்கள். இவர்களுக்கும் மக்களுக்கும் நேரடிதொடர்பு உள்ளதால் பா.ஜனதா எம்.பி.க்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடியும் கட்சி மேலிடமும் விரும்புகிறது.

எனவே, பா.ஜ.க எம்.பி.க்களின் செயல் பாடுகளை கண்காணித்து அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. பாராளுமன்ற கூட்டத்திற்கு எம்.பி.க்களின் வருகை, கேள்விகேட்பது, விவாததிறமை ஆகியவை எப்படி இருந்தன என்பதற்கு ஏற்க மதிப்பெண்கள் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கூட்டம் நடைபெறாத நாட்களிலும் எம்பி.க்களின் செயல்பாடுகள், பொதுமக்களுடன் உள்ள தொடர்பு, பொதுநலன் பற்றிய செயல்பாடு ஆகியவை பற்றியும் ஆய்வுசெய்யப்படும்.

சிறப்பாக செயல்படும் எம்.பி.க்களுக்கு மத்திய மந்திரிபதவி வழங்குவும் திட்டமிடப்பட்டுள்ளது பாராளுமன்ற முக்கியவிவாதத்தில் பங்கேற்க அனுமதி மற்றும் முக்கிய பதவிகள் வகிக்கவும் வாய்ப்பளிக்கப்பட இருக்கிறது.

பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா ஆகியோர் இணைந்து இந்தமுடிவை எடுத்துள்ளதாக தககவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.