சொத்து குவிப்பு வழக்கு குறித்து தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:–
இந்த தீர்ப்பு தாமத ப்பட்ட தீர்ப்பு. தடுக்கப்பட்ட தீர்ப்பு அல்ல. மத்திய பாஜக ஆட்சியில் சட்டம் தன்கடமையை சுதந்திரமாக செய்யமுடியும் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒருசாட்சி.
தமிழகத்திற்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருப்பது வருத்தமான விஷயம். பா.,ஜனதாவை பொறுத்தவரை அரசியலில் தூய்மை, நேர்மை, உண்மை இருக்க வேண்டும் என்பதுதான். அதற்கு மாறாக யார் நடந்தாலும் அவர்கள் தண்டனைக் குள்ளாவார்கள் என்பதை உணரவேண்டும்.
அரசியல் என்பது சேவை செய்யத் தான். ஆனால் அரசியல் மூலம் சொத்துசேர்த்து அதன் மூலம் தேர்தலை சந்திக்கும் போது நேர்மையானவர்கள் தேர்தலை சந்திக்க முடியாது. இதைத்தான் நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத் தேர்தல் நிரூபித்தது.
அரசியலில் நேர்மையாக இருக்க வேண்டும். தவறு செய்பவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள் என்பதை வருங்கால சந்ததியினர் உணர்ந்து கொள்வதற்கு இது ஒருபாடம்.
ஒரே ஒரு கவலை சட்டம்– ஒழுங்கை சீர்குலைப்பதன் மூலம் தீர்ப்பை சீர்படுத்தி விட முடியாது. வன்முறைகள் எங்கும் நடக்கக் கூடாது. சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.