பாஜக. தலைமையிலான தே.ஜ.,கூட்டணி அரசு சமீபத்தில் பொறுப் பேற்றதையடுத்து, பாராளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட ரெயில்வே பட்ஜெட்டில் பல்வேறு புதியதிட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றில், குஜராத் தலை நகர் அகமதாபாத்தில் மெட்ரோ ரெயில்களை அறிமுகம்செய்யும் திட்டமும் ஒன்றாகும். மொத்தம் 35.96 கி.மீ தூரத்தை மெட்ரோரெயில் பாதையின் மூலம் இணைக்கும் இந்ததிட்டத்துக்கு ரூ.10,773 கோடி செலவாகும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.
நேற்று, பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச் சரவை கூட்டத்தில் இந்த திட்டத்துக்காக நிதி ஒதுக்கீடுசெய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக 15.42 கிலோ மீட்டர் நீளப் பாதையும், இரண்டாவது கட்டமாக 20.54 நீளமுள்ள பாதையும் அமைத்து, இவ்வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்களை இயக்கும் இந்ததிட்டம் வரும் 2018-ம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
அகமதாபாத் நகரின் போக்குவரத்து நெரிசலைகுறைத்து, சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத, விரைவான, பாதுகாப்பான இந்த மெட்ரோரெயில் சேவையை மத்திய அரசும், குஜராத்மாநில அரசும் 50:50 என்ற விகிதாச்சார பகிர்மானத்தில் இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.